நீங்கள் தற்கொலை செய்து கொள்ள எண்ணுகிறீர்களா?

Find Help Now
Language हिन्दी / ਪੰਜਾਬੀ / ગુજરાતી / मराठी / English

**நீங்கள் நம்பிக்கையின்மையின் கடைசி முனையில் இருக்கிறீர்களா? இயலாமை மற்றும் அவநம்பிக்கையாக உணருகிறீர்களா? அடுத்த நாளை எவ்வாறு எதிர்கொள்வது என்று அறியாது தவிக்கிறீர்களா? இந்த வழிவகைகள் உங்களுக்கு உதவும்: **

வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பை நீங்கள் ஏன் அளிக்கவேண்டும்

நீங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருப்பதால் இந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

வாழ்க்கையில் நம்பிக்கையை இழந்த அந்த நபர் நீங்களாக இருந்தால், மேலும் வாசியுங்கள். உங்களுடன் நான் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு அனுமதியுங்கள். தற்கொலை செய்துகொள்ள நீங்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டீர்கள் அல்லது அதை முயன்று பார்த்துவிட்டீர்கள். உங்கள் எண்ணமெல்லாம் இந்த வாழ்க்கை எவ்வளவு வீணானது, இதுபோல் இனியும் வாழ்க்கையை தொடர முடியாது என்பது பற்றித்தான் இருக்கும். அதன் வலி மிக அதிகமானது. நீங்கள் சுமக்கும் பிரச்சினைகளைப் பற்றி அல்லது நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உணர்வுப்பூர்வமான துன்பத்தை ஒருவரும் புரிந்து கொள்வதில்லை.

ஆனால் ஒரு நம்பிக்கையை உங்களிடம் பகிர்ந்து கொள்ள என்னை அனுமதிப்பதற்காகவும், உங்கள் வாழ்க்கை எவ்வாறு மாறுபட்டு இருந்திருக்கலாம் மற்றும் உங்கள் வாழ்க்கைக்கு ஏன் இன்னும் ஒரு வாய்ப்பை நீங்கள் அளிக்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்போது நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள்.

விருப்பத்தேர்வுகள்: உங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்வதைத் தவிர்த்து வேறு ஏதாவது ஒன்றைச் செய்ய முயற்சி மேற்கொள்வதை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் என்று உங்களிடம் சொல்ல நான் விரும்புகிறேன். ஆலோசனைகளை நீங்கள் பெற்றிருக்கலாம் அல்லது யாருடனாவது நீங்கள் பேசியிருக்கலாம். அவை உங்களுக்கு பயன்படாது போயிருக்கலாம். உங்களைப் பீடித்திருக்கும் இந்த சுய-அழித்தொழிப்பு எண்ணங்களை விட்டு விலகி உங்களை வேறு திசையில் இட்டுச்செல்ல உதவும் சில நடவடிக்கைளை மீண்டும் மேற்கொள்ள நீங்கள் முயற்சிக்க வேண்டும் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன், .

நீங்கள் கூறலாம், “நான் ஒரு தோல்வியுற்றவனானது எதனால் என்பது எனக்குத் தெரியும். எனக்கு கடன் இருக்கிறது. எனது மனைவி/கணவர் என்னை விட்டுச் சென்றுவிட்டார். ஒருவர் மரணமடைந்துவிட்டார். நான் வேலையில்லாதவன். நான் தனிமையானவன். “நான் — (வெற்றிடத்தை நீங்கள் நிரப்புங்கள்)” நான் உங்களிடம் சொல்ல விரும்புவதெல்லாம், உங்களுக்கு அதிகமான பிரச்சினைகள், போராட்டங்கள் இருந்தாலும், உங்கள் நரம்பு மண்டலத்தில் சில வேதிப்பொருட்களின் குறைபாடு காரணமாக நீங்கள் உடல்ரீதியான போராட்டங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கலாம் என்பது தான். நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் மனச்சோர்வுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கக் கூடும்.

முதலாவதாக, நீங்கள் ஏன் மனச்சோர்வை அனுபவிக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.

மனச்சோர்வு அனுபவித்துக் கொண்டிருக்கும் பெரும்பாலான மக்கள் மனச்சோர்வுக்கு நியூரோ கெமிக்கல்களின் குறைபாடும் ஒரு காரணம் என்பதை அறிந்திருக்கவில்லை. உலகப் பிரசித்திபெற்ற Mayo Clinic சமீபத்தில் வெளியிட்ட ஒரு கட்டுரையில் “மன இறுக்கம் அல்லது உடல்நல பாதிப்பு, போன்ற சுற்றுச்சூழல் காரணிகளுடன் இணைந்த ஒரு மரபணு குறைபாடு, நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள் எனப்படும் மூளை வேதியல் அளவிகளில் ஏற்றத்தாழ்வைத் தூண்டி மனச்சோர்வு ஏற்படக் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். செரடோனின், நோரிபைநிஃப்ரைன் மற்றும் டோப்பமைன்—ஆகிய மூன்று வகையான நியூரோ டிரான்ஸ்மிட்டர்களின் அளவுகளில்—ஏற்ற தாழ்வுகள் ஏற்படுவது மனச்சோர்வு தொடர்புடையதாகத் தோன்றுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வேதிப்பொருட்கள் கவனக்குவியத் திறன், மன நிலை மேம்பாடு மற்றும் அதிகரித்த சக்தி ஆகியவற்றை மக்களுக்கு அளித்து உதவுகிறது. உடற்பயிற்சி மற்றும் ஆன்மீக வழிகளில் மேம்பாடு காணுவது போன்ற இயற்கை முறைகளுடன் இணைந்து மருந்துகளையும் உட்கொள்வதும் இந்த நியூரோ கெமிக்கல்களை அதிகரிக்க உதவும். நீங்கள் அன்பு செலுத்திய ஒருவரின் மரணம் ஏற்படுத்திய இழப்பு அல்லது மணமுறிவு, தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி, கோபம் அல்லது கடந்த கால பாலியல் துன்புறுத்தல்கள் போன்ற இதர பிரச்சினைகளையும் களைய நீங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும். இந்த நெருக்கடிகள் மற்றும் இழப்புகளை கையாள்வது, செயல்முறைப்படுத்துதல் மற்றும் வருந்துதல் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆலோசனை பெறுவதற்கு சென்றிருக்கிறீர்களா மற்றும் மனச்சோர்வுக்கு சிகிச்சை பெற்றிருக்கிறீர்களா? இல்லையென்றால், உடனடியாக உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது மனநல மருத்துவர் அல்லது அருகாமையிலுள்ள அவசர சிகிச்சை மையத்தின் உதவியை நாடுங்கள். அமெரிக்காவில் எங்கு வேண்டுமாயினும் ஒரு தொலைபேசி மதிப்பீடு மற்றும் ஆலோசனை பெறுவதற்கு, 1-800-383-4673 என்ற எண்ணில் நீங்கள் ராபாவின் ஹாட்லைனை அழைத்து ஒரு பரிந்துரையைப் பெறலாம். கனடிய மற்றும் சர்வதேச ஹாட்லைன்களுக்கு, தயவுசெய்து இந்தப் பக்கத்தின் மேற்புறத்தைப் பார்க்கவும் அல்லது உங்கள் உள்ளூர் வள ஆதாரங்களைத் தேடுங்கள். தயவுசெய்து இதை உடனடியாக செய்யுங்கள்!

தற்போது நீங்கள் ஆலோசனைகளை பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், இந்த தற்கொலை எண்ணம் மற்றும் சுய-அழித்தொழிப்பு எண்ணங்கள் ஆகியவற்றுக்கு உங்களுக்கு உதவி தேவைப்படுவது பற்றி உங்களுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருப்பவர் மற்றும் / அல்லது மனநல மருத்துவர் ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர் ஒருவரை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.

மனச்சோர்வைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் உங்கள் உணர்ச்சிகளுக்கு சவால் விடுதல்

உங்கள் உணர்ச்சிகள் மற்றும் உங்கள் மனச்சோர்வு போன்றவை நம்பக்கூடாதவை. உணர்ச்சிகள் குறிக்கோளுடன் கூடிய உண்மைத்தன்மை கொண்டவையல்ல. அவை உள் உணர்வுகளின் சுட்டிகள் மற்றும் உங்களை தற்கொலை எண்ணங்களில் ஆழச்செய்யும் காரணத்தை நீங்கள் ஆராயவேண்டும். உங்களை நீங்களே அழித்துக்கொள்ள எண்ணுவதற்கான காரணம் வாழ்க்கை பற்றியும் மற்றும் எதிர்காலம் பற்றியும் பொய்யான தகவல்களை நம்புவதுதான். கடந்த காலத்தில் அதிகளவிலான மக்கள் மனச்சோர்வுடன் போராடியிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அந்த உணர்ச்சிகளுக்கு வளைந்து கொடுக்கவோ அல்லது அதை நம்பவோ இல்லை. தங்கள் எதிர்காலமும், தங்கள் வாழ்க்கையும் மாறலாம் என்ற உறுதியுடன் அதைக் கடந்து செல்லும் தைரியம் அவர்களுக்கு இருந்தது.

மார்ட்டின் லூதர் அவருக்கு அடிக்கடி ஏற்படும் அவரது அடிமட்ட மனோநிலையை விரிவாக விளக்கியிருக்கிறார்: "ஒரு வாரத்திற்கும் அதிகமாக மரணம் மற்றும் நரகம் ஆகியவற்றின் நுழைவாசலுக்கு அருகாமையில் நான் இருந்தேன். உடல் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தேன். கிறிஸ்துவை முழுமையாக இழந்தேன். மன அழுத்தம் மற்றும் கடவுள் நிந்தனையால் நான் நடுங்கிக் கொண்டிருந்தேன்” (ஹியர் ஐ ஸ்டாண்ட், அபிங்டன் பிரஸ்)

மதபோதகர் மற்றும் நூலாசிரியரான டான் பேக்கர், அவரது மனச்சோர்வு அனுபவங்களை எழுதுகிறார், “உண்மையை விட்டு வெகு தொலைவில் விலகி இருப்பதாக நான் உணர்ந்தேன். வாழ்க்கை மங்கலாகிப் போனது பெரும்பாலும் மையத்தை விட்டு விலகியே இருந்தது. எனது வாழ்க்கை ஒரு பாசாங்கு மற்றும் அதீத கற்பனையேயன்றி வேறு ஏதுமில்லை என்று தோன்றியது. யாரும், ஏன் கடவுளும் - என்னைப்பற்றி உண்மையாகவே கவலைப்படவேயில்லை என்று எனக்குத் தோன்றியது. சில சமயங்களில் தற்கொலை ஒன்றுதான் தீர்வு என்று தோன்றியது...”

இந்த மனிதர்கள் அவர்களது எண்ணத்தைப் பின்தொடர்ந்து செல்லவில்லை. நம்பிக்கை இழக்கவைக்கும் எண்ணங்களை நிராகரித்தார்கள் மற்றும் முன்னேறிச் சென்றார்கள். அவர்களால் தடைகளை மற்றும் தோல்வி மனப்பான்மையை மீறிச்செல்ல முடிந்தது. உங்களின் எதிர்மறையான உணர்வுகள் மற்றும் எண்ணங்களால் நீங்களும் அலைக்கழிக்கப்பட வேண்டியதில்லை.

அந்த எண்ணங்களுக்குச் சவால் விடும் நேரம் இது உங்கள் வாழ்க்கையை ஒரு ஆரோக்கியமான கண்ணோட்டத்துடன் அணுகுவதற்கான நேரம் இது. நீங்கள் மதிப்பு மிக்க ஒரு நபர். நீங்கள் முக்கியமானவர் மற்றும் உங்களால் உங்கள் எண்ணங்களை மாற்றியமைத்துக்கொள்ள மற்றும் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள முடியும்! உங்களுக்கு நம்பிக்கையை வழங்குவதற்கு கடவுளுக்கும் ஒரு வாய்ப்பை நீங்கள் அளிக்க வேண்டும் என்று நான் மன்றாடிக்கேட்டுக் கொள்கிறேன். கடவுளை நோக்கித் திரும்பி அவரின் உதவியையும் மற்றும் வழிகாட்டுதலையும் நாடுங்கள். அவரால் என்ன செய்யமுடியும் என்பதை நீங்கள் ஏன் அறிந்து கொள்ளக்கூடாது? அவர் எவ்வாறு வாழ்க்கையை மாற்றியமைத்தார், கீழ்மைப்படுத்தப்பட்டவர்களை மேம்படுத்தினார் மற்றும் நம்பிக்கையிழந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டினார் என்பதற்கான சாட்சிகள் என்னிடத்தில் இருக்கிறது.

உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்:

  1. எனது மனச்சோர்வுக்கு அடிப்படையான உணர்வுகள் என்ன?
  2. கீழான சுயமதிப்பை நான் கொண்டிருக்கிறேனா?
  3. எனக்கு குற்ற உணர்ச்சி பிரச்சினைகள் உள்ளனவா?
  4. நான் உறவு பிரச்சினைகளால் தடுமாறிக் கொண்டிருக்கிறேனா?
  5. ஏதாவது ஒன்றைப் பற்றிய பயத்தில் இருக்கிறேனா?
  6. ஏதாவது ஒரு இழப்பினால் நான் தடுமாறிக் கொண்டிருக்கிறேனா?
  7. எனது மனதை எந்தவகையான எண்ணங்கள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன?
  8. கடவுளை நோக்கி நான் எவ்வாறு அடியெடுத்து வைப்பது?

இவற்றையெல்லாம் உங்களுக்குக் காட்சிப்படுத்த கடவுளை வேண்டுங்கள். அதன் பிறகு பிரார்த்தித்து உங்களுடைய வாழ்க்கையை முழுமையாக திருப்பி அமைக்குமாறு அவருடைய உதவியை நாடுங்கள், கைவிடாதீர்கள். பின்வாங்குபவராக இருக்காதீர்கள்! உங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ள மாட்டீர்கள் என்று உங்களுக்கு நெருக்கமான யாரிடமாவது ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள்.

நம்பிக்கையற்ற உணர்வுகளைத் தாண்டி முன்னேறுதல்

பொதுவாக மனச்சோர்வில் வாடும் மக்கள் அவர்களை சிறப்பாக உணரச்செய்வது எதுவோ அதைச் செய்வதில்லை. உங்களுக்கிருக்கும் மனச்சோர்வுக்கு எதிராக போராடி முன்னேற வேண்டியது அவசியம். எவருடனாவது உங்கள் உணர்ச்சிகள், உங்கள் வாழ்க்கைப் பற்றி பேசுங்கள். எவரிடமாவது உங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவது மிகவும் பயன்தரக்கூடியது. எவருடனாவது இணைந்து குறிப்பாக ஆலோசகர்கள், உங்கள் எண்ணத்தின் அடித்தளமாக விளங்குவது என்ன என்று ஆராய்வது உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தொடங்க உங்களுக்கு உதவும்.

உடல் பரிசோதனைக்காக உங்கள் மருத்துவரை காண்பது மற்றும் அவரிடம் உங்கள் மனச்சோர்வு பற்றி சொல்வது உளப்பூர்வமான காரணங்களுக்கு மேலும் சிகிச்சை அளிக்கக்கூடும். மனச்சோர்வுக்கெதிரான மாத்திரைகளை நீங்கள் உட்கொள்ள வேண்டியதிருக்கும். தொடர்ந்த முறையான உடற்பயிற்சிகள் மற்றும் முறையான உணவு போன்றவை மிகவும் உதவிகரமாக இருக்கும் மற்றும் அது உங்கள் உடல் இழந்த மற்றும் உடலுக்குத் தேவையான நியூரோ கெமிக்கல்களின் அளவையும் அதிகரிக்கச் செய்யும்.

அன்பானவர்கள், நண்பர்கள், கடவுள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பாக நேரத்தை கழிப்பது உங்களுக்கு நெருங்கிய தொடர்பு கொண்ட உணர்வை அளித்து உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தை மீட்டெடுக்க உங்களுக்கு உதவும்.

எங்கு தொடங்குவது: இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்தீர்கள். வாழ்க்கையை நோக்கி ஒரு அடி எடுக்க வேண்டியதை நீங்கள் கருத்தில் கொள்வீர்களா? உங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்கும் ஒரு அடி? உதவியை நாடி எடுக்கவேண்டிய ஒரு அடி? வாழ்க்கை பயனற்றது, நீங்கள் ஒரு உதவாக்கரை மற்றும் உங்களுக்கு எதிர்காலமே இல்லை என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டிருந்த அனைத்துப் பொய்களையும் நம்ப மறுக்கும் ஒரு நிலை.

உங்களுக்கு ஒரு நம்பிக்கையான எதிர்காலம் இருக்கிறது என்பதை உங்களுக்குச் சொல்லவே நான் இங்கிருக்கிறேன். அதிகளவிலான மக்கள் உதவிப்பெற்று ஒரு சிறந்த வாழ்க்கையை அனுபவிக்க சென்றதை நான் கண்டிருக்கிறேன்.

உள்ளூர் அவசர அழைப்பு எண் ஒன்றுக்கு இப்போதே அழையுங்கள் (பக்கத்தின் மேற்புறம் காண்க). தொடங்குவதற்கு உங்களுக்கு எது உதவக்கூடும் என்பதற்கான பட்டியலை எழுதத் தொடங்குங்கள்.

என் பேச்சு உங்களுக்கு நீங்களே தீமை விளைவித்துக் கொள்வதிலிருந்து உங்களை விடுவித்திருக்கும் என்று நான் நம்புகிறேன். தயவுசெய்து உதவிக்காக எவரையாவது தொடர்பு கொள்ளுங்கள் அல்லது இந்த தளத்திலுள்ள ஒரு வழிக்காட்டுபவருடன் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் பாதிரியார், ஆலோசகர், ஒரு நண்பர், உங்கள் மருத்துவர் ஆகியோரை அழையுங்கள். நம்பிக்கை நிறைந்த வாழக்கையை நோக்கி இப்போதே ஒரு அடியெடுத்து வையுங்கள்.

_ இந்த கட்டுரை, “கிவ் லைஃப் அனதர் சாய்ஸ்”, லினட் ஜெ. ஹோய்._அவர்களால் எழுதப்பட்டது-.