நேரம் கடந்து கொண்டே இருக்கிறது

கடந்த கோடைக்காலத்தில் எனது நண்பர் ஒருவரின் திருமணத்தில் “இரண்டாவது நபராக” கலந்துகொள்ளச் சென்று அங்கு பூங்கொத்தை கையிலேந்தினேன். பின்பு அதை நான் மேஜைக்கு திரும்ப கொண்டு செல்கையில் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமலும் — தேவையில்லாமலும் - நாங்கள் தம்பதியர்கள் அல்ல என்பதை அவன் சுட்டிக்காட்டினான். அங்கு ஒரு காலியிடத்தையும் ஒரு நடன நிகழ்ச்சியை நிரப்பவுமே அங்கு நான் சென்றிருக்கிறேன் ஆனால் எந்த நேரத்திலும் எனது சொந்த வெள்ளை ஆடையை அணியக்கூடும் என்ற நம்பிக்கையை நான் பெறக்கூடாது என்ற உறுத்தலான உண்மை என்னை உறுத்தியது. நாங்கள் வெறும் நண்பர்களாக மட்டுமே இருந்தோம்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நான் திருமண நிகழ்ச்சிகளை விரும்புகிறேன். ஒரு வருடத்தில் அவற்றில் சிலவற்றுக்கு செல்லும் நிலையில் இப்போது என் வாழ்க்கை இருக்கிறது. நன்றாக ஆடையணிந்து அன்பானவர்களுடன் இணைந்து கொண்டாடுவது ஒரு ஆனந்தம். திருமண கேளிக்கைகளில் பங்குகொள்வது எப்போதுமே ஒரு கௌரவம் தான். ஆனால் எனக்கு வயதாகும்போது, ​​அவர்கள் மிகவும் வலுவாக உணர்கிறார்கள்.

காத்திருப்பவர்களுக்கு நல்லவையே நடக்கும் என்று திரும்பத்திரும்ப எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் நான் நீண்டநாட்களாகக் காத்துக்கொண்டிருக்கிறேன்! நான் வெளிப்புறமாக சிக்கிக்கொண்டதாக உணருகிறேன்: பெரும்பாலான என் நண்பர்களின் திருமாணமானவர்கள் உலகத்தில் இன்னும் ஒரு உறுப்பினராகாது உலக வாழ்க்கையின் வெளிப்புறமாக இன்னும் தனித்திருக்க என்னைத் தூண்டும் இடத்தில் இருக்கிறேன். ஆனால் நான் எப்போது உள்ளே அழைக்கப்படுவேன் அல்லது அழைக்கப்படவே மாட்டேனோ என்பது எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் அதுதான் தனியாயிருப்பதில் மிகவும் கடினமான பகுதி.

வேறு எவரும் எனது படுக்கை விரிப்புக்களை திருடிச்செல்ல மாட்டார்கள் என்றாலும், சில்லென்றிருக்கும் இரட்டையர் படுக்கை மேல் வீழ்வது மிக மனவேதனையைத் தரும் ஒரு உண்மை.

என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள், இதில் நிச்சயமாக சில நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது. எனக்குப் பிடித்தவற்றை எப்போது வேண்டுமானாலும் செய்துகொள்வது, ஸ்ட்ரீமிங்க் திரைப்படங்களை காண லாக் இன் செய்வது, வேறு எவருடனும் சமரசம் செய்து கொள்ளவேண்டியதில்லை என்பவை ஒரு வேளை வேறு ஒருவருக்கு நான் “சொந்தமாயிருந்தால்” எழக்கூடிய சந்தேகங்கள் பற்றிய எந்தவிதமான குற்ற உணர்ச்சியுமில்லாமல் என்னுடைய ஆண் நண்பர்களுடன் சுற்றித்திரிவது எனக்குப் பிடித்திருக்கிறது

எனது நண்பர்களுடைய குழந்தைகளின் கரங்களைப் பற்றிக்கொள்வது எனக்கு பிடிக்கும், ஆனால் அவர்கள் “அம்மா’ என்று அழைத்து எனது கரங்களிலிருந்து விடுபடுவது எனது தனிமையை எனக்கு உணர்த்தும். வேறு எவரும் எனது படுக்கை விரிப்புக்களை திருடிச்செல்ல மாட்டார்கள் என்றாலும், சில்லென்றிருக்கும் இரட்டையர் படுக்கைமேல் வீழ்வது மிக மனவேதனையைத் தரும் ஒரு உண்மை. ஒரு தீவிரமான உறவில் என்னை ஈடுபடுத்திக்கொண்டு எனக்கான ஒரு சிறு குடும்பத்தை ஏற்படுத்திக்கொள்ள நான் தீவிர ஆவலோடு — மற்றும் அச்சத்தோடும் — இருக்கிறேன்.

இணையவழி இணை தேடும் தளங்களில் நான் முயற்சித்தேன், நான் சகஜமானவள் மற்றும் அன்னியர்களோடு பேசக்கூடியவள். பல்கலைக்கழகத்தில் ஐந்து வருடங்கள் கழித்தேன், அங்கு பெரும்பாலான எனது நண்பர்கள் அவர்களது துணையை சந்தித்து காதலில் வீழ்ந்தார்கள். அதிகளவில் டேட்டிங் செய்திருக்கிறேன், மற்றும் அதிக எண்ணிக்கையில் ஆண்களை சந்தித்திருக்கிறேன். அவர்களில் வெகு சிலரே நான் இணைந்து வாழ விரும்பும் வாழ்க்கைகுகந்த நபர்களாக நெருங்கி வருகிறார்கள். குறைந்தபட்சம் என்னைப்பொறுத்த வரையில், எனது அனுபவத்தில் அப்படி நெருங்கி வரும் நபர்கள் கிடைக்காமல் போய்விடுகிறார்கள், ஒரு ஆச்சரியத்துடன், (ஒருவேளை ஒரு மிகையுணர்ச்சியோடு): இதுதானா? காலாகாலத்துக்கும் நான் மட்டுமேவா, நான் என்ன தவறிழைத்தேன் என்ற எண்ணத்துடன் நான் இன்னும் அடிக்கடி என்னை தனியாகவே காண்கிறேன்.

தனிமை நிறைந்த இரவுகளில் நான் ஏதோ ஒரு வகையில் தவறிழைத்திருப்பதாக என்னுடைய இதயம் அழுவதை கேட்கிறேன்.

காத்திருக்கத் தேவையில்லாதிருக்கும் (குறைந்தபட்சம் என்னைப்போல் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிராத) எனது நண்பர்களிடமிருந்து குறிப்பாக எது என்னை பிரித்துக்காட்டுகிறது என்பது பற்றி எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. தனிமை நிறைந்த இரவுகளில் நான் ஏதோ ஒருவகையில் தவறிழைத்திருப்பதாக என்னுடைய இதயம் அழுவதை நான் கேட்கிறேன். அவர்கள் மெலிந்த உடற்கட்டுள்ளவர்களா? அழகானவர்களா? பண்பான மக்களா? தொடர்ந்து சிறந்த தேர்வுகளை மேற்கொள்ளுகிறார்களா? அவர்களது விருப்பத்துக்கும் குறைவாக தேர்ந்தெடுக்கிறார்களா? அவர்கள் தகுதிக்கும் கீழானவர்களை தேர்ந்தெடுக்கிறார்களா? தேர்ந்தெடுப்பதில் நான் தான் மிகவும் கறாராக இருக்கிறேனா?

தீவிரமான உறவுகளில் நான் ஈடுபடவேயில்லை என்றில்லை. அனைத்திலிருந்தும், ஒன்றைத் தவிர, நான்தான் வெளியேறினேன். எனக்கு எதிர்காலத்துக்கான அன்பும் நம்பிக்கையும் அளிக்கப்பட்டது, ஆனால் நான்தான் அச்சப்பட்டேன் அல்லது நான் தன்னலவாதியாக இருந்தேன் அல்லது நான் உணர்வற்று இருந்தேன் அல்லது நான் செய்தது சரியாகத்தான் இருக்கும். எனக்குத் தெரியாமலேயே போய்விடும் போலிருக்கிறது.

என்னுடைய காலம் கடந்து கொண்டிருப்பதை என்னால் உணரமுடியாமல் இல்லை. என்னைச்சுற்றிலும் தம்பதியர்கள் சூழ்ந்திருக்க நான் அடிக்கடி தனிமையாக உணர்கிறேன், ஆனால் என்னைப்பற்றி மேலும் அதிகமாக நான் தெரிந்து கொள்கிறேன். நீங்கள் தனித்திருந்து போராடிக் கொண்டிருப்பவரானால், உங்கள் தொடர்புத் தகவல்களை கீழே குறிப்பிடுங்கள். உங்களது உண்மையான அல்லது போலி பெயரை நீங்கள் பயன்படுத்தலாம். அது உங்களைப் பொறுத்தது. எங்கள் குழுவிலிருந்து ஒருவர் கூடிய விரைவில் உங்களை சந்திப்பார். தனிமையாக நீங்கள் உணரலாம் ஆனால் நீங்கள் தனியானவர் அல்ல

புகைப்பட கிரெடிட் Joy Deb

நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.

இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!

நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

உங்கள் பாலினம்:
வயது வரம்பு:

உங்களுக்கு பொருத்தமான வழிகாட்டியை வழங்க உங்கள் பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை நாங்கள் கேட்கிறோம் சேவை விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை.