எனது உடல்நலக்குறைவுக்கு ஊடே

“உடல்நலக்குறைபாடு ஒருவரின்‌ வாழ்க்கையை மாற்றியமைத்துவிடும்‌ ” என்று பலர்‌ சொல்லக்‌ கேட்டிருக்கிறேன்‌, எனக்கு தொற்று , பரவாநிலையில்‌ ஒரே இடத்தை தாக்கி தீவிரமாக வலுவிழக்கச்செய்யும்‌ நோயான நிணநீர்கணு காசநோய்‌ இருப்பதாகக்‌ கண்டறியப்பட்ட போது அதை நானே அனுபவித்தேன்‌. அது என்‌ வாழ்க்கை முறையை முழுவதுமாக மாற்றியமைத்துவிட்டது .

2005 ஆம்‌ ஆண்டு எனது கருத்தரிப்பு சோதனை அறிக்கை நேர்மறையாக வந்தபோழுது நான்‌ மகிழ்ச்சியில்‌ வானத்தில்‌ மிதந்து கொண்டிருந்தேன்‌ . வீட்டில்‌ இருந்த ஒவ்வொருவரும்‌ அந்த செய்தியை கேட்டு மிகவும்‌ உற்சாகமாக இருந்தார்கள்‌ ! இருப்பினும்‌, எனது நாடிக்குக்‌ கீழே ஒரு சிறிய வீக்கத்தை நான்‌ கண்டபொழுது அந்த மகிழ்ச்சியான நாட்கள்‌ திடீரென்று விரக்தி மிகுந்த நாட்களாக மாறியது .மருத்துவர்‌ டிபி ஆக இருக்கலாம்‌ என்று சந்தேகித்தார்‌ , இருப்பினும்‌ நான்‌ கருத்தரித்திருந்ததால்‌ , வீரியமுள்ள மருந்துகள்‌ வளரும்‌ கருவை பாதிக்கக்‌ கூடும்‌ என்பதால்‌ சிகிச்சைக்கு நான்‌ தகுதியானவராக இல்லை என்றும் சொன்னார்‌ . இவை அனைத்தும்‌ என்னை நிலைகுலைய வைத்தன ! பரிசோதனை அது டிபி என்று உறுதிப்படுத்தியவுடன்‌ , எனக்கு வீரியம்‌ குறைவான மருந்துகள்‌ குறிப்பிட்ட காலத்துக்கு வழங்கப்பட்டது , அந்தக்‌ காலத்துக்குள்‌ வீக்கம்‌ குறைந்து, எனக்கு மகள்‌ பிறந்தாள்‌.

நான்‌ கருத்தரித்திருந்ததால்‌, வீரியமுள்ள மருந்துகள்‌ வளரும்‌ கருவை பாதிக்கக்‌ கூடும்‌.

அதிலிருந்து மீண்டுவிட்டேன்‌ என்று நான்‌ நினைத்தேன்‌ , ஆனால்‌ அது மீண்டும்‌ என்னைத்‌ தாக்கியது . நான்‌ மீண்டும்‌ மருந்துகள்‌ எடுத்துக்கொள்ளத்‌ தொடங்கினேன்‌. அந்த காலகட்டத்தில்‌ வீக்கம்‌ இருக்கிறதா அல்லது இல்லையா என்பதுதான்‌ எனக்கு நோய்‌ இருப்பதற்கான ஒரே அறிகுறியாக இருந்தது . இருப்பினும்‌, வீக்கம்‌ தணியத்‌ தொடங்கிய இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும்‌ அந்த வீக்கம்‌ உண்டானதையும்‌ அது பெரிதாவதையும்‌ நான்‌ கவனித்தேன்‌ . விலையுயர்ந்த வீரியமுள்ள மருந்துகளை ஒருவருட காலமாக உட்கொண்ட பிறகும்‌ எந்த ஒரு நிவாரணமும்‌ இல்லாமல்‌ நான்‌ கவலை கொண்டிருந்ததால்‌ , ஒரு டிபி மருத்துவ நிபுணரை கலந்தாலோசிக்க முடிவு செய்தேன்‌.

நிணநீர்கணுடிபி நோய்‌ தொற்றுநோயல்ல என்று கருதப்பட்டாலும்‌ எனது ஒரு வயது மகள்‌ அத்தோடு எனது இதர குடும்ப உறுப்பினர்களையும்‌ நினைத்து நான்‌ கவலைப்பட்டேன்‌ . அவர்களும்‌ அந்த நோயால்‌ பாதிக்கப்படக்கூடும்‌ என்று நான்‌ பயந்தேன்‌ .

சற்று முன்னோக்கி 2010 ஆம்‌ ஆண்டுக்குச்‌ சென்றால்‌ - இந்த நோய்‌ தாக்கி ஐந்து ஆண்டுகளுக்குப்‌ பிறகும்‌ நான்‌ குணமடையவில்லை. நான்‌ மிக்க துயரத்தில்‌ இருந்தேன்‌ ! டிபி சிகிச்சையில்‌ சிறப்புத்திறன்‌ பெற்ற ஒரு நல்ல மருத்துவரை கலந்தாலோசித்தேன்‌ . எனது நோய்‌ மருந்தெதிர்ப்பு தன்மை கொண்டது என்று அவர்‌ கருதினார்‌. ஆகவே நோயை எதிர்த்துப்‌ போராட வீரியமான மருந்துகள்‌ மற்றும்‌ ஊசி மருந்துகளும்‌ கலந்த சிகிச்சை முறையை தொடர்ந்தார்‌ . அப்போது, எனது வீக்கத்திற்கு காரணமான கட்டி ஒரு கோல்‌..ப்‌ பந்து அளவுக்கு பெரிதாகியிருந்தது அதை ஒரு அறுவை சிகிச்சைமூலம்‌ அகற்ற வேண்டும்‌ , அப்போதுதான்‌ அது நோயின்‌ தாக்கத்தை குறைத்து சிகிச்சையில்‌ கூடுதல்‌ பயன்தரும்‌ என்று பரிந்துரைத்தார்‌ .

இந்த நோய்‌ தாக்கிய ஐந்து வருடங்களுக்குப்‌ பிறகும்‌ எனக்கு குணமாகாமல்‌ இருக்கிறது .

நான்‌ அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்‌ , ஆனால்‌ எனது வலுவிழந்த உடலுக்கு மருந்துகள்‌ மிக வீரியமுள்ளதாக இருந்தன . அலுவலகத்துக்கு பயணிப்பது பயங்கரமாக இருந்தது ; குமட்டல்‌ , நடுக்கம்‌ மற்றும்‌ பசியின்மை போன்றவற்றை நான்‌ அனுபவித்தேன்‌ . அத்துடன்‌ கூடுதலாக , நான்‌ மிகவும்‌ நேசித்த எனது எனது தலை முடி கொட்டத்‌ தொடங்கியது . பக்கவிளைவுகள்‌ அவ்வளவு மோசமாக இருந்தன ! பணிச்சுமை, எனது மகளை பராமரிப்பது மற்றும்‌ விட்டு வேலைகளை கவனிப்பது போன்றவை திணறடிக்கச்‌ செய்ததால்‌ , பத்தாண்டுகளுக்கும்‌ மேலாக ஒரு பொக்கிஷமாக கருதிய எனது வேலையை விட்டுவிட கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டேன்‌ .

எனது நிலை குறித்து எனது மேற்பார்வையாளரிடம்‌ கலந்துரையாடினேன்‌ . நலம்‌ பெறவேண்டும்‌ என்பதற்காக “ஓரிரண்டு மாதங்களுக்கு பணிக்கு வராத விடுப்பை ” நான்‌ கேட்ட பொழுதும்‌ , அவர்‌ எனக்கு “சிலமாதங்களுக்கு சம்பளத்துடன்‌ கூடிய மருத்துவ விடுப்பை ” வழங்கினார்‌.

இந்த நோயிலிருந்து குணம்பெற அந்த சலுகைக்காலம்‌ எனக்கு உதவியது .

இந்த நீண்டகால நோயின்‌ தீவிர தாக்கத்தால்‌ உங்கள்‌ வாழ்க்கை ஒரு ரோளர்‌ கோஸ்டர்‌ சவாரி போல்‌ ஏற்ற இறக்கத்துடன்‌ இருந்தால்‌ , நீங்கள்‌ தனியாக இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்‌ . கடினமான காலங்களை நாம்‌ ஏன்‌ அனுபவிக்க வேண்டியதிருக்கிறது என்பதை நாம்‌ எப்போதுமே புரிந்து கொள்ள முடிவதில்லை. அவை பெரும்பாலும்‌ உணர்வு பூர்வமாகவும்‌ , உடல்‌ ரீதியாகவும்‌ சிரமத்தை அளிக்கும்‌ காலமாகும்‌. உடல்‌ நலைகுறைவு அல்லது துன்புறுதல்‌ போன்ற காலத்தை நீங்கள்‌ கடக்க வேண்டியதிருந்தால்‌ , அது பற்றி பேசுவதற்கு எங்களது வழிகாட்டி ஒருவருக்கு தயவு செய்து எழுதத்‌ தயங்காதீர்கள்‌.

அந்தரங்கம்‌ கருதி ஆசிரியரின்‌ பெயர்‌ மாற்றப்பட்டுள்ளது.#####
புகைப்பட கிரெடிட் Annie Spratt

நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.

இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!

நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

உங்கள் பாலினம்:
வயது வரம்பு:

உங்களுக்கு பொருத்தமான வழிகாட்டியை வழங்க உங்கள் பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை நாங்கள் கேட்கிறோம் சேவை விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை.