மௌனமாக துன்பத்தை அனுபவிப்பது

எனக்கு ஆறு வயதாகும் போதுதான் அது நிகழ்ந்தது. எனது தந்தையின் பணி காரணமாக எங்கள் குடும்பம் லிபியாவுக்கு குடிபெயர்ந்தது. முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். வெளிநாடு செல்வது அது தான் எனக்கு முதல்முறை ஏனென்றால் எங்கள் குடும்பத்திலேயே நாங்கள் தான் முதல் முறையாக வெளிநாடு செல்பவர்கள். ஒரு புதிய இடத்திற்கு சென்று புதிய நண்பர்களை அடையும் வாய்ப்பை எதிர்நோக்கியிருந்தேன்.

ஒரு சோகமான நாளில் வீட்டு வேலைக்காரன் ஒருவன் பாலியல் வன்முறைக்கு என்னை ஈடுபடுத்தியபோது அந்த நன்னம்பிக்கைகள் அனைத்தும் இடிந்து விழுந்தன. வேறு யாருக்கும் அது தெரியாது. உதவியை நாட எனக்கு போதுமான தைரியம் இல்லை. அந்த நபர் வேலை பார்த்த வீட்டிற்கு செல்ல நான் அச்சப்படுவேன். என்னுடைய நண்பர்களின் துணையோடு இருக்கும் போது கூட, அவன் என்னை தனிமைப்படுத்துவதாக நான் உணர்ந்தேன். அச்சத்தின் காரணமாக, குளியலறையில் என்னை பூட்டிக்கொண்டேன். இதர பெரியவர்கள் வீட்டில் இருப்பதை உறுதிசெய்த பிறகே நான் வெளியே வருவேன். இந்த நிகழ்வு பொதுவெளியில் வெளிப்பட்டது. என்னை வன்முறைக்கு உள்ளாக்கியவன் இந்தியாவுக்கு நாடு திரும்ப அனுப்பப்பட்டான்.

பெரியவர்கள் குழந்தைகளை பாழ்படுத்த விரும்புவார்கள் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை

ஆனாலும் எனது சோதனைகள் முடிவுறவில்லை. எனது குடும்பத்துக்கு நெருக்கமான பல்வேறு நபர்களால் அடுத்த ஆறு வருடங்களுக்கு நான் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டேன். நான் மட்டும் ஏன் பாதிக்கப்படுகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. நான் ஒரு கூச்ச சுபாவமுள்ள பெண்ணாக இருந்ததாலா? எனது குடும்பம் வசதி படைத்த ஒன்றாக இல்லை என்பதாலா? எனது ஒன்றுவிட்ட சகோதரர்கள் செய்த கேலி கிண்டல்கள் அனைத்தும் என்னை பலவீனமாகவும், கோழையாகவும் ஆக்கிவிட்டதா? பெரியவர்கள் குழந்தைகளை பாழ்படுத்த விரும்புவார்கள் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை.

இவை அனைத்திற்கும் நான் தான் காரணம் என்று நான் நினைத்தேன்—நான் சபிக்கப்பட்டவள். நான் எதுவும் பேசவில்லை ஏனென்றால் நான் அவமானமாக உணர்ந்தேன். என்னுடைய குடும்பத்தினர் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? என்ன நடந்தது என்ற சிந்தனையை என் மனதில் இருந்து நான் அகற்றிவிட்டால் வன்முறை நின்றுவிடும் என்று என்னை நானே சமாதானப்படுத்த முயற்சித்து என்னுடைய ஆசைகளை அடக்கிக்கொண்டு வாழ்கிறேன். ஆனாலும் எவ்வளவு கடினமாக நான் முயற்சித்தாலும், என் சுய குற்றச்சாட்டுக்களை என்னால் அமைதிப்படுத்த முடியவில்லை. இதில் நான்தான் மிக மோசமான நபர் என்று நான் நினைத்தேன். குற்றத்தில் சிக்கிய எண்ணங்கள் எனது வாழ்வில் அனைத்திலும் பரவியது. என்னால் எதையும் சரியாகச்செய்ய முடியவில்லை.

எனக்கு வயதாகிய நிலையிலும் எனது எண்ணங்களை அடக்கிக்கொண்டேன் மற்றும் எனக்கு நேர்ந்ததை வன்முறை என்று ஏற்றுக்கொள்ள மறுத்தேன். அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன் என்பதாலா? திரும்பவும் இயல்பாக மாற நினைத்து, வன்முறையின் அனைத்து நினைவுகளையும் புறக்கணிக்க நான் கடுமையாக முயற்சித்தேன். அந்தப் பாதிப்பு ஏற்கனவே விளைந்துவிட்டது என்பதை கொஞ்சம் கூட நான் அறியவில்லை.

இறுதியாக, நான் உடைந்து போனேன். நான் என் பெண்மையை வெறுக்கத் தொடங்கினேன். நான் ஆண்மை குணம் நிறைந்தவளாக மாறினேன், என்னால் மக்களை நம்பமுடியவில்லை குறிப்பாக நெருக்கமான உறவினர்களை. என்னைப் பொறுத்த வரை நான் எப்போதும் தற்காப்பு உணர்வைக் கொண்டவளாக மனச்சிதைவை அடைந்தேன்.

இப்போது, எனக்குக் கிட்டத்தட்ட 40 வயதாகிறது ஆனாலும் நினைவுகள் மங்கவில்லை.

பேசுவதற்கு எனக்கு யாரும் இல்லை என்பதை இப்போது உணருகிறேன். அந்த தாக்குதல் பற்றி அறிந்த பிறகு எனக்கு எப்படி உதவுவது என்று எனது பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. காலம் காயத்தை ஆற்றும் அல்லது குறைந்த பட்சம் என்ன நடந்தது என்பதை நான் மறக்க நேரிடலாம் என்று நினைத்து அவர்கள் அமைதியாக இருந்தார்கள். பேசுவதற்கு ஒரு நம்பிக்கையான நண்பன் வேண்டும் என்று நினைத்தேன்—என்ன நடந்திருந்தாலும் அது எனது தவறல்ல என்று எனக்கு நம்பிக்கையூட்டுவதற்கு மற்றும் நான் தனியானவள் அல்ல என்றும் என்னுடன் பேசுவதற்கு, ஒருவர் தேவை. என்னால் அத்தகைய நண்பரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

இப்போது, எனக்குக் கிட்டத்தட்ட 40 வயதாகிறது ஆனாலும் நினைவுகள் மங்கவில்லை. அந்த வன்முறையின் ஒவ்வொரு நிகழ்வையும் என்னால் தெளிவாக நினைவில் கொண்டுவர முடிகிறது. இப்போது ஒரு தாயாக, என்னுடைய குழந்தைகள் பள்ளிக்குச் சென்றாலோ அல்லது வெளியே விளையாடச் சென்றாலோ நான் மனச்சிதைவுக்கு ஆளாகிறேன். பாலியல் வன்முறை பற்றி அவர்களுடன் நான் பேசியிருக்கிறேன். மற்றும் கவனமாக இருக்கும் படியும் கற்பித்திருக்கிறேன். திரும்பிப் பார்க்கும் பொழுது, ஒரு வேளை நான் பேசியிருந்தால், உதவியை நாடியிருந்தால் மற்றும் என்னையே நான் குற்றம் சாட்டிக்கொண்டிருக்காவிட்டால் அது எனது வலியை குறைத்திருக்கும் மற்றும் இயல்பான, மகிழ்ச்சிகரமான குழந்தைப் பிராயத்தை அது அளித்திருக்கக் கூடும்​.

நீங்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானவர் என்றால் தயவுசெய்து என்னைப்போல அமைதியாக இருக்காதீர்கள். நினைவுகளையும் வலியையும் மனதிற்குள் புதைத்திருப்பது அந்த வன்முறை மேலும் உங்களை வலிமையாக பாதிக்கக்கூடும். இதை நீங்கள் தனியாக எதிர்கொள்ளவேண்டியதில்லை. நீங்கள் எங்களது இலவச மற்றும் நம்பகமான ஆதரவாளர்களில் ஒருவரை தொடர்பு கொள்ளலாம்—இரக்க குணமுள்ள கேட்கக்கூடிய நபர்கள், முழுமை பெற நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தில் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள், நீங்கள் உங்கள் தகவல்களை கீழே பூர்த்தி செய்தால் ஒரு ஆதரவாளர் உங்களை விரைவில் தொடர்பு கொள்வார். உங்கள் உண்மைப் பெயர் அல்லது போலிப் பெயரை நீங்கள் அளிக்கலாம், அது முற்றிலும் உங்களைப் பொறுத்தது.

அந்தரங்கம் கருதி ஆசிரியரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
புகைப்பட கிரெடிட் PROHarsha K R

நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.

இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!

நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

உங்கள் பாலினம்:
வயது வரம்பு:

உங்களுக்கு பொருத்தமான வழிகாட்டியை வழங்க உங்கள் பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை நாங்கள் கேட்கிறோம் சேவை விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை.