மகிழ்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது

முதல்முறையாக கற்பழிப்புக்கு உள்ளாக்கப்படும் போது டிகே வின் வயது 15. வெளியிட நீச்சல்குளம் ஒன்றில் நீந்துவதற்காக அவள் போனாள் அங்கு இன்னொரு குடும்பம் இருந்தது, அவள் பாதுகாப்பாக உணர்ந்தாள். ஆனால் அந்தக் குடும்பத்தினர் அவர்களின் அறைக்குச் சென்ற பிறகு, அவளும் இந்த நபருமே இருந்தார்கள் மற்றும் அவளுக்குத் தோன்றாத எண்ணங்கள், அவனுக்குத் தோன்றியது.

அவளது கதையை காணுங்கள்

அவளது அறை வரையிலும் அவன் பின்தொடர்ந்து வந்தான். "அவள் நலமாக பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யத் தான்" அதன் பிறகு அவளைத் தொடர்ந்து உள்ளேயும் வந்தான். பின்னர் அவளுக்காக குளியல் தொட்டியை தயார் செய்தான், அங்கு தான், குளிர்ந்த தண்ணீர் நிரம்பிய அந்தத் தொட்டியில் அவள் அமர்ந்திருந்த நிலையில் அடுத்த நாள் காலையில் அவர்கள் கண்டார்கள்.

அவளுக்கு 21 வயது நிரம்பியபோது மீண்டும் ஒரு முறை அவளுக்கு அது நடந்தது. அவளது ஆண் நண்பர் மற்றும் சில புதிய நண்பர்களுடன் திரைப்படம் காணச் செல்வதாகத் தான் அவள் நினைத்தாள். அந்த இரவு அவள் தான் "கேளிக்கை"யாக இருக்கப் போகிறாள் என்பதை அவள் அறியவில்லை.

அவளுக்கு நடந்த சம்பவத்திற்கு அவள் காரணம் இல்லாவிட்டாலும் அதன் அவமானம் மற்றும் குற்ற உணர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கு டோனியாவிற்கு வருடக்கணக்கில் பிடித்தது, தன்னைத் தானே மன்னித்துக்கொள்ள அவள் கற்றுக்கொள்ள வேண்டியதிருந்தது அவளுக்கு நடந்ததை வைத்து அவளை வரையறுக்க முடியாது என்ற புரிதலுடன் அது தொடங்கியது. காலப்போக்கில், தான் அன்பு செலுத்தப்படத்தகுதியானவள் என்பதை உணர்ந்தாள். அவளுக்கு மற்றவர்கள் இழைத்த தீமையால் அவளது மதிப்புக்கு எந்தவித பங்கமும் வந்துவிடவில்லை என்பதை கண்டறிந்தாள்.

நீங்கள் ஒரு கற்பழிப்பிலிருந்து மீண்ட ஒருவராக இருந்தால், அந்த காயங்கள் ஆழமானவை, அதன் வடுக்கள் தீவிரமானவை, அதன் உணர்வுகள் சிக்கலானவை ஆகும். ஆனால் நீங்கள் தனித்துவிடப்படவில்லை. உங்களது தகவல்களை கீழே குறிப்பிட்டால், எங்கள் குழுவிலிருந்து ஒருவர் விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வார்

மேலும் காண்க: சுவாதியின் கதை: "மௌனமாக துன்பத்தை அனுபவிப்பது".

அந்தரங்கம் கருதி ஆசிரியரின் முதலெழுத்துக்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
புகைப்பட கிரெடிட் Juan Pablo Arenas

நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.

இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!

நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

உங்கள் பாலினம்:
வயது வரம்பு:

உங்களுக்கு பொருத்தமான வழிகாட்டியை வழங்க உங்கள் பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை நாங்கள் கேட்கிறோம் சேவை விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை.