என்னிடம்‌ ஏதோ கோளாறு இருக்கிறதா ?

நாங்கள்‌ உற்சாகமடைந்தோம்‌ - கருத்தரிப்பு சோதனை நேர்மறையாகவும்‌ அனைத்தும்‌ மிகச்சிறப்பாகவும்‌ நடந்தபோது ஒரு கச்சிதமான சிறு குடும்பம்‌ , சிறு இதயத்தின்‌ ஒரு கச்சிதமான துடிப்பு , ஒரு கச்சிதமான எதிர்காலம்‌ , என்னுள்‌ குட்டி பாப்பா வளருவதற்கான ஆதாரங்கள்‌ எனது வயிற்றுப்‌ பகுதியில்‌ இன்னும்‌ தோன்றவில்லை என்றாலும்‌ , என்னுடைய பிரகாசமான முகம்‌ மற்றும்‌ மகிழ்ச்சி பொங்கும்‌ இதயம்‌ அதை மறைக்க முடியவில்லை . அனைத்தையும்‌ முழுமையாக உணரமுடிந்தது -நம்பிக்கையும்‌ மகிழ்ச்சியும்‌ உயிர்ப்புடன்‌ இருந்தது.

விஷயங்கள்‌ ஒரு கணத்தில்‌ எவ்வாறு மாற்றம்‌ காணமுடியும்‌ என்பது வேடிக்கையாக இருக்கிறது , சாதாரணமாக குளியலறைக்கு சென்றபோது , ஒரு துளி இரத்தம்‌ . வழக்கமான ஸ்கேன்‌ பரிசோதனை , ஆனால்‌ இதயத்துடிப்பு இல்லை . உள்ளே சின்னஞ்சிறு கைகளும்‌ கால்களும்‌ துடிக்கும்‌ என்ற ஒரு சிறு எதிர்பார்ப்பு அசைவின்மையால்‌ மாற்றியமைக்கப்பட்டுவிட்டது . எங்களது இதயம்‌ நொறுங்கிப்‌ போனது . சின்னஞ்சிறிய உயிரால்‌ நிரப்பப்பட்டிருந்த நம்பிக்கை இப்போது இல்லை , எங்களது இதயம்‌ நிச்சயமின்மை மற்றும்‌ வெற்றிடத்தால்‌ நிறைந்தது .

எனது கர்ப்பப்பையில்‌ நான்‌ எதிர்பார்த்து பிரார்த்தனை செய்த இந்த சின்னஞ்சிறு குழந்தை வளரவில்லை என்பது விரைவிலேயே நிரூபணமானது . அதைக்‌ தொடர்ந்து நடந்தவை எனக்கு அளிக்கப்பட்ட எச்சரிக்கைகளை விட மிக கூடுதலாக அதிர்ச்சி தரக்கூடியவைகளாக இருந்தன . கடினமான மற்றும்‌ உணர்வு பூர்வமாக அதிர்ச்சியளிக்கும்‌ செயலாக என்னுடைய குழந்தையின்‌ கலைந்த கருவை பெற்றெடுக்கும்‌ செயல்‌ அமைந்தது . மரத்துப்போன உணர்வு கொண்ட சுகாதார பராமரிப்பு பணியாளர்கள்‌ ("அழாதே, இது ஒன்றும்‌ பெரிய விஷயமில்லை") மற்றும்‌ நண்பர்கள்‌ மற்றும்‌ குடும்பத்தினரிடமிருந்து வந்த உணர்வற்ற கருத்துக்கள்‌ ("தைரியமாக இரு நீ நன்றாகத்‌ தான்‌ இருக்கிறாய்‌ , கடந்து செல்‌, சீக்கிரமே மீண்டும்‌ நீ முயற்சிக்கலாம்‌ , எப்படியிருந்தாலும்‌ அது இன்னும்‌ ஒரு குழந்தையாக உருவாகவில்லையே"). போன்ற எவற்றாலும்‌ எனது சோகத்தை தீர்க்க உதவமுடியவில்லை .

ஒரு பெண்ணாக, ஒரு மனைவியாக நான்‌ தோல்விய டைந்துவிட்டதாக நான்‌ உணர்ந்தேன்‌ .

மற்றவர்களும்‌ அவ்வாறு தான்‌ என்னைப்‌ பார்த்தார்கள்‌ என்று நிச்சயமாக நான்‌ நம்புகிறேன்‌ . என்னாலும்‌, மற்றவர்களாலும்‌ என்‌ மீது ஏற்றிவைக்கப்பட்ட அடையாளம்‌ காணமுடியாத குற்ற உணர்வும்‌ எனக்கு உதவ தடையாக இருந்தது . கேள்விகள்‌ எனது உள்ளத்தை ஆக்கிரமித்தன . என்னிடம்‌ ஏதாவது குறைபாடு இருந்தால்‌ தான்‌ என்ன ? எப்போதும்‌ , என்னால்‌ ஒரு குழந்தையை பெற்றெடுக்கவே முடியாவிட்டால்‌ தான்‌ என்ன ?

எனது குழந்தையின்‌ இழப்புக்கு மட்டும்‌ நான்‌ வருந்தவில்லை , அத்துடன்‌ எனது எதிர்காலத்தின்‌ நிச்சயமின்மைக்கும்‌ சேர்த்தே நான்‌ வருந்துகிறேன்‌ . ஒரு பெண்ணாக , ஒரு மனைவியாக நான்‌ தோல்வியடைந்துவிட்டதாக நான்‌ உணர்ந்தேன்‌ . மற்றவர்களும்‌ அவ்வாறு தான்‌ என்னைப்‌ பார்த்தார்கள்‌ என்று நிச்சயமாக நான்‌ நம்புகிறேன்‌ . எனது குழந்தையின்‌ இழப்பு உடல்‌ ரீதியாகவும்‌ மனதளவிலும்‌ இதுவரை நான்‌ எப்போதுமே அனுபவித்திராத வலிமிக்க ஒரு நிகழ்வாகும்‌ .

மீண்டும்‌ நம்பிக்கையையும்‌ மகிழ்ச்சியையும்‌ திரும்பப்பெற நாளானது , ஆனால்‌ குணமடைவதை நோக்கி நான்‌ பயணித்த பாதையில்‌ எனக்கு உதவிய சில விஷயங்களும்‌ இருந்தன . எனது குழந்தைக்காக துக்கப்படுவதும்‌ மற்றும்‌ கொண்டாடுவதும்‌ நல்லதே என்பதை நான்‌ உணர்ந்தேன்‌ . அதாவது நான்‌ எனது இழப்பை புறக்கணித்து ஒதுக்கிவிடக்‌ கூடாது . எனது இழப்பை பற்றி பேசுவது ஒரு ஆசீர்வாதமாக மாறும்‌ என்பதை உணர்ந்து கொள்ளவும்‌ அது உதவியது . இதே போன்ற துக்கத்தில்‌ வாடும்‌ இதர மக்களை அதிக எண்ணிக்கையில்‌ கண்டறிய அது என்னை நடத்திச்‌ சென்றது . வெற்றிடமாகவும்‌ நிலையற்ற தன்மையுடனும்‌ எனது அனுபவங்கள்‌ இருந்தாலும்‌ , கடவுள்‌ எனது இதயத்தை சுகப்படுத்தி மீண்டும்‌ நம்பிக்கையை உண்டாக்குவார்‌ என்பதை நான்‌ உணர்ந்தது தான்‌ இதன்‌ மூலம்‌ நான்‌ பெற்ற மிகப்பெரிய உதவி.

கருச்சிதைவின்‌ வலிகளைத்‌ தாங்கி நீங்கள்‌ தனியாகப்‌ பயணிக்க வேண்டியதில்லை . ஆரோக்கியமான வழிகளில்‌ உங்கள்‌ கவலைகளை தாங்கிக்கொள்ள உதவ உங்களுக்கு ஒரு கேட்கும்‌ செவி தேவைப்பட்டால்‌, கீழே உள்ள படிவத்தை மட்டும்‌ பூர்த்தி செய்யுங்கள்‌ . ஒரு நம்பகமான உதவியாளர்‌ விரைவில்‌ உங்களைத்‌ தொடர்பு கொள்வார்‌ . நீங்கள்‌ உங்கள்‌ உண்மைப்‌ பெயர்‌ அல்லது ஒரு போலிப்‌ பெயரை அளிக்கலாம்‌ . அது முழுவதுமாக உங்களைச்‌ சார்ந்தது.

அந்தரங்கம்‌ கருதி ஆசிரியரின்‌ பெயர்‌ மாற்றப்பட்டுள்ளது .
புகைப்பட கிரெடிட் George Ruiz

நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.

இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!

நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

உங்கள் பாலினம்:
வயது வரம்பு:

உங்களுக்கு பொருத்தமான வழிகாட்டியை வழங்க உங்கள் பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை நாங்கள் கேட்கிறோம் சேவை விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை.