எனது வேலையையும் நம்பிக்கையையும் இழந்தது

நான் இருபது வருடங்களுக்கு மேல் பணியிலிருந்திருக்கிறேன் ஆனால் ஒரே நிறுவனத்தில் அல்ல. கடந்த இருபதாண்டுகளில், 7 லிருந்து 8 முறை நிறுவனங்களை மாற்றியிருக்கிறேன். —அதில் சிலர் என்னை போகச் சொல்லியிருக்கிறார்கள் சிலவற்றிலிருந்து நானே விலகியிருக்கிறேன்.

நான் முன்பு பணிபுரிந்த நிறுவனம் ஒன்று மீண்டும் அழைத்த போது அந்த வாய்ப்பை அப்படியே ஏற்றுக்கொண்டேன். அவர்களுக்கு நிதி கிடைத்திருந்தது, 9 ஆண்டுகளுக்கு முன் நான் பணிபுரிந்த போது பார்த்ததை விட மிகப்பெரிய ஒரு புதிய அலுவலக கட்டிடத்திற்கு மாறியிருந்தார்கள், அனைத்தும் சிறப்பாக நடப்பதாகவே தோன்றியது.

அவர்களிடம் பணம் இருந்தது, மற்றும் அவர்கள் அடைய வேண்டிய இலக்கு எது என்ற தொலைநோக்குப் பார்வையையும் கொண்டிருந்தார்கள். எனது முன்னாள் சக பணியாளர்கள் மற்றும் எனது பழைய முதலாளிகளையும் சந்தித்தேன். ஒரு கனவு நனவாகியது போல் இருந்தது. எனக்கு பழக்கமானவர்களுடன் பழக்கமான சூழலில் திரும்பவும் வேலை பார்ப்பது என்பது ஒரு ஆறுதலான விஷயம்.

என்னுடைய ஆசைகள் நிறைவேறுவதற்கான காலம் வந்துவிட்டதாகவே தோன்றியது.

பணி தொடங்கியது, நன்கு தெரிந்த குழு ஒன்று எனக்கு ஒதுக்கப்பட்டது. நான் முன்பு பணியிலிருந்தபோது வெவ்வேறு குழுக்களில் பணிபுரிந்த சிலரைத் தவிர என்னுடைய குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் புதியவர்கள். அது மிகச் சிறப்பாக இருந்தது. என்னுடைய ஆசைகள் நிறைவேறுவதற்கான காலம் வந்துவிட்டதாகவே தோன்றியது. விரைவாகவே வேலையை கற்றுக்கொண்டேன். பழகும் கால அளவு எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருந்தது. சந்தைப்படுத்துதலில் பெரும் பணம் செலவழிக்கத் தொடங்கியதும் வெளியிலிருந்து நோக்கும் போது வணிகம் மிக நிலையாக இருப்பதாகத் தோன்றியதும் இந்த பணி நீண்ட காலம் நீடிக்கும் என்ற நம்பிக்கையை எனக்குள் மீண்டும் வலியுறுத்தியது

ஆறு மாதம் கடந்த பிறகு, சம்பவங்கள் கட்டவிழத் தொடங்கின. அந்த நிறுவனத்தின் உரிமையாளர், தனது மகனை மூத்த பதவி ஒன்றில் அமர்த்தினார். அந்தப் பதவிக்குரிய போதுமான அளவு அனுபவம் அற்றவராக அந்த நபர் இருந்தார். முடிவெடுக்கும் நடைமுறைகள் தடுமாறத் தொடங்கின. பணப் பற்றாக்குறை ஏற்பட்டது. விரைவிலேயே, எங்களது சம்பளம் தாமதமாகத் வரத் தொடங்கியது

கிட்டத்தட்ட ஒரு வருடம் பணியிலிருந்ததற்கு பிறகு, டவுன் ஹாலில் பேசும் சந்தர்ப்பத்தில், சி.இ.ஓ அவர்கள் அச்சமூட்டும் அறிக்கையை வெளியிட்டார்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் பணியிலிருந்ததற்கு பிறகு, டவுன் ஹாலில் பேசும் சந்தர்ப்பத்தில், சிஇஓ அவர்கள் அச்சமூட்டும் அறிக்கையை வெளியிட்டார் நிறுவனம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால், சில பணியாளர்கள் குறைக்கப்படவேண்டும். நான் என்னைக் குறித்தும் எனது குழு குறித்தும் சற்று கவலையோடு இருந்தேன். ஆனால் நான் மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்டதாலும் எனது குழு மிக சிறியது என்பதாலும் கத்தி எங்கள் தலையில் விழாது என்ற நம்பிக்கையில் நான் இருந்தேன். பணியாளர்கள் குறைப்பு அறிவிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன் சிஇஓ என்னை அவரது அலுவலகத்திற்கு அழைத்து எனது துறையை எந்த வகையிலெல்லாம் எனது குழுவை வலுப்படுத்தலாம் மற்றும் சக்தியூட்டலாம் என்று கலந்துரையாடிய சம்பவம் எனது நம்பிக்கைக்கு கூடுதல் வலு சேர்த்தது.

ஒரு நாள் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவரை சந்திக்கச் சொல்லி அழைப்பு வந்தது. எந்தக் கவலையுமின்றி, நம்பிக்கையோடு, அலுவலகத்துக்குள் நுழைந்தேன். சந்திப்பு நேர்மறையான தொனியில் தொடங்கியது, ஆனால் விரைவிலேயே நான் தேவைப்படவில்லை என்பது எனக்கு அறிவிக்கப்பட்டது, முழுவதுமாக அதிர்ச்சிக்குள்ளாகிய நான் நம்பவே முடியாத நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் சிஇஓ வை பார்த்து எனது குழுவை வலுப்படுத்துவது மற்றும் சக்தியூட்டுவது பற்றி பேசியது குறித்து ஹச். ஆர் தலைவரிடம் கூறி 48 மணி நேரத்திற்குள் என்ன நடந்தது? என்று கேட்டேன் திருப்தி தரும் வகையில் அல்லது அறிவுபூர்வமான எந்த விதமான பதிலும் எனக்கு கிடைக்கவில்லை.

அலுவலகத்தை விட்டு விரைந்து வெளியேறி உடனடியாக என் குழுவை சந்தித்து செய்தியை பகிர்ந்து கொண்டேன். என்னைப் போலவே அவர்களும் பேச்சு மூச்சற்று வாயடைத்துப் போனார்கள். நான் உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேறி வீட்டுக்கு பயணித்தேன். “இப்போது என்ன நடந்தது?” மற்றும் “இது ஏன் நடந்தது?” போன்ற பல்வேறு சிந்தனைகள் எனது மனதில் கடந்து சென்றன. என்னால் நம்பவே முடியவில்லை. எனது குடும்பத்துக்கு நான் என்ன சொல்வேன்? நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன்; எனது நம்பிக்கை மிக மோசமான வகையில் அத்துமீறப்பட்டுவிட்டது.

நான் வேலையை இழந்து ஒருவருடம் ஆகிறது, ஆனால் இன்னும் என் கோபம், காயம் மற்றும் அவமானம் தீரவில்லை. வேறு வேலைக்கான தேடுதல் தொடருகிறது, ஆனால் இந்த துரோகம் குறிப்பிடத்தக்க வகையில் மிக மோசமாக என்னை பாதித்துவிட்டது. காலம் அனைத்து காயங்களையும் குணப்படுத்தும் என்று சொல்கிறார்கள். நான் அதை நிச்சயமாக நம்புகிறேன். இப்போது எனக்கு ஒரு வேலை இல்லை ஆனால் நான் நம்பிக்கையை இழந்துவிடவில்லை.

இதைப்போன்ற போராட்டங்களை நீங்கள் எதிர்கொண்டால், நீங்கள் தனிமையானவர் அல்ல என்பதை நினைவில் வைத்திருங்கள். அது பற்றி பேசுவதற்கு எங்களுடைய வழிகாட்டி ஒருவருக்கு கடிதம் எழுதுவதற்கு தயவுசெய்து தயங்காதீர்கள். இது முற்றிலும் இலவசம் மற்றும் நம்பகமானது.. கீழே உங்கள் தகவல்களை பூர்த்தி செய்தால், விரைவில் வழிகாட்டியிடமிருந்து உங்களுக்கு தகவல் வரும். உங்களது உண்மையான பெயர் அல்லது போலி பெயரை நீங்கள் அளிக்கலாம். அது முற்றிலும் உங்களைச் சார்ந்தது.

ஆசிரியரின் பெயர் அந்தரங்கம் குறித்து மாற்றப்பட்டிருக்கிறது
புகைப்பட கிரெடிட் Venkadesh Subramanian

நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.

இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!

நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

உங்கள் பாலினம்:
வயது வரம்பு:

உங்களுக்கு பொருத்தமான வழிகாட்டியை வழங்க உங்கள் பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை நாங்கள் கேட்கிறோம் சேவை விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை.