முடிந்து போன திருமண உறவின் விலங்குகள்
எங்களது திருமண வாழ்க்கையில் நான் தனித்து விடப்பட்டேன். எனது உணர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் அல்லது ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பது எனது கணவருக்கு தெரியவில்லை. ஏழுவருட காதல் மற்றும் 13 வருட மண வாழ்க்கைக்குப் பிறகு சிறுகச்சிறுக நாங்கள் அன்னியர்களாகத் தொடங்கினோம்- பரஸ்பர புரிதல் மறையும் நிலைக்கு மற்றும் எங்களிடையே தொடர்புக்கான அடையாளம் ஒரு துளி கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
நான் எவ்வாறு உணர்கிறேன் நான் எவ்வளவு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன், என்பதை அவன் கவனிக்க வேண்டும் என்பதற்காக எனது மனக்குமுறலை அவன் கேட்கவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அதைச் செய்யவேண்டும் என்பதில் அவனுக்கு விருப்பமில்லை. எங்களது இல்லத்தை தாண்டி அனைவருக்கும் அவன் ஒரு “நல்ல நண்பன்” ஆனால் பலவருடங்களாக எல்லாவற்றிலும் நான் இரண்டாவது இடத்திலேயே இருப்பதாக உணர்ந்தேன். என்னை சிந்திக்கத் தூண்டியது — அவன் என்னை ஒரு நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினேன் — நான் எவ்வாறு உணர்கிறேன் என்று அவனிடம் தெரிவித்த போது அது உண்மையல்ல என்பது போல எனது உணர்வுகளை உதாசீனப்படுத்தினான். நாங்கள் ஒரே கூரையின் கீழ் வாழும் அரிதாகவே பேசும், அன்னியர்களானோம். அரிதான சந்தர்ப்பங்களில் நாங்கள் பேசிக்கொள்வதுண்டு. அது எப்போதுமே வாக்குவாதத்தில் தான் முடிவடையும். படுக்கை கூட தனித்தனி அறைகளில்தான், ஏனென்றால் அவனுக்கு என்னருகில் இருக்கக்கூட விருப்பமில்லை.
எனது கணவர் அருகே இருந்தாலும் கூட உண்மையில் எனக்காகவோ எங்களது மகளுக்காகவோ இருப்பதாக எந்த உணர்வும் இருப்பதில்லை. பலவருடங்களுக்கு முன்பே அவர் அன்னியப்பட்டுவிட்டார். ஆனால் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள என்னை நான் அனுமதிக்கவில்லை. அதிகளவு நேரத்தை இல்லத்துக்கு வெளியே அவர் செலவழித்தார், எனது மகளை அடிப்படையில் நான் ஒருத்தியாகவே வளர்க்க நேர்ந்தது. மக்கள் அவரை நேசித்தார்கள் — அவர் அவர்களின் கதாநாயகனாக திகழ்ந்தார். அவரின் உதவி அவர்களுக்குத் தேவைப்பட்டது. ஆனால் அது அவரை அவரது சொந்த குடும்பத்தையே விட்டு விலகச் செய்துவிட்டது. பொருளாதாரம் மட்டுமே வழங்கும் ஒருவராக மாறிப்போனார், ஆனால் அவர் ஒரு இணை பெற்றோராகவும் இருக்க வேண்டும் என்பது எனது தேவையாக இருந்தது.
எங்களது திருமணத்தின் கடைசி சில ஆண்டுகளில், அவருக்கு இன்னொரு தொடர்பு இருப்பது தெரிய வந்தது, எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது.
என்னுடனான உறவு உணர்வுபூர்வமாக, மனதளவிலும் உடலளவிலும் அவருக்கு முடிந்துவிட்டதாக அவர் சொல்வது வழக்கம். ஆனால் அவரது வார்த்தைகளின் முழு அர்த்தம் எனக்கு அப்போது விளங்கவில்லை. எங்களது திருமணத்தின் கடைசி சில ஆண்டுகளில், அவருக்கு இன்னொரு தொடர்பு இருப்பது தெரியவந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது. அவரது கள்ளத்தொடர்பை கண்டும் காணாமல், இன்னொரு பெண்ணுடன் அவர் உணர்வுபூர்வமாகவும் உடலளவிலும் தொடர்பு வைத்திருக்கிறார் என்று அறிந்த போதிலும், அவருடனான மண வாழ்க்கையைத் தொடர்ந்தேன், நான் முழுவதுமாக கைவிடப்பட்டுவிடுவேனோ என்று அச்சமடைந்தேன்.
இறுதியில் அது எனக்கு உறைத்தபோது, ஒரு கூட்டுக்குள் நான் முடங்கிப்போனேன். தனிமையில் இருக்க நான் விரும்பினேன் ஏனென்றால் அவருக்குக் கொடுக்க என்னிடம் வேறு எதுவும் இல்லை. எனது மனதோடும் எங்களது உறவோடும் நான் போராடினேன். அவரது நடத்தை குறித்து நான் பேசினால், எங்கள் இருவருக்கும் சண்டை மூளும் அதன் பிறகு அவன் முழுதும் குடிக்கத் தொடங்குவார். எனக்கு நரம்புத்தளர்ச்சி ஏற்ப்பட்டுவிட்டது என்று எண்ணி ஒரு மனநல ஆலோசகரிடம் நான் சென்றேன், மன அழுத்தத்திற்கு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்துகளை உட்கொள்ளத்தொடங்கினேன். அது என்னை நம்பிக்கையிழந்த நோயாளியாக தனிமைபடுத்தப்பட்டவளாக உணரவைத்தது.
எனக்கு என்ன நடக்கிறது என்பதை அவன் உணரவேயில்லை ஏனென்றால் பணியில் அவன் மிகவும் பரபரப்பாக அல்லது வேறு எங்காவது இருந்தான். நான் உடைந்து சிதறிக் கொண்டிருந்தேன். ஏனென்றால், எங்களது முடிந்து போன திருமண உறவில் அவனது பங்கை அவன் நிறைவேற்றவில்லை. எல்லாவற்றுக்கும் என்மீது பழி சுமத்தினான். தம்பதியர் ஆலோசனைகளில் கலந்து கொள்ள அவரை அழைத்தபோது அதற்கு மறுத்துவிட்டார். எனது மனநல மருத்துவரை தொடர்ந்து நான் தனியாக சந்திக்க நேர்ந்ததால், எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் நான் ஒரு மன நோயாளி என்று சொல்லியிருக்கிறார்.
வருடக்கணக்காக நானே என்னை உள்ளே வைத்து பூட்டிக்கொண்டேன்.
என்னையே — என்னை மட்டுமே, தயார் செய்து கொள்ள தொடங்கியதன் மூலம் எனது மன அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தேன். என்னை அப்படியே ஏற்றுக்கொண்ட என்னுடைய குடும்பத்தினர், மற்றும் நண்பர்களின் உதவியை நாடினேன். ஆரோக்கியமான சமூகத்தினரிடம் தொடர்பு கொள்ளத் தொடங்கியது, எனது தவறு என்று எனக்குச் சொல்லப்பட்ட எனது முடிந்துபோன திருமண வாழ்க்கை பந்தத்திலிருந்து விடுபட வழிவகுத்தது. எனக்குத் தேவையான நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஏற்பு ஆகியவற்றை கடவுளிடம் தான் முறையிட்டுப் பெறவேண்டும் என்பதை உணர்ந்தேன்.
வருடக்கணக்காக நானே என்னை உள்ளே வைத்து பூட்டிக்கொண்டேன்.. அது எனது உணர்வுகளில் ஒரு மகத்தான சேதத்தை விளைவித்தது. என்னைப் பகிர்ந்து கொள்ள மற்றும் என்னைப் புதுப்பித்துக்கொள்ள நான் மறுத்ததால், வாழ்க்கையின் அனைத்து அழுத்தங்களையும் நானே சுமந்து கொண்டிருந்தேன். ஒரு முடிந்துபோன உறவை விட்டுவிட்டதால், குணமடைந்து ஒரு புதிய தொடக்கத்தை நோக்கி என்னுடைய பழைய நிலைக்கு என்னால் மீள முடிந்தது.
நான் ஒரு மீட்சியை நோக்கி சிறப்பாக முன்னேறிக்கொண்டிருப்பதை உணருகிறேன். நான் கடந்து வந்த அனைத்தும் நான் நினைத்ததை விட இன்னும் அதிகமாக என்னை வலுப்படுத்தியிருக்கிறது. என்னுடைய வாழ்க்கையை பல வண்ணங்களைப் போல் வாழ்ந்திருக்கிறேன், சில வெளிறிய மற்றும் சில இதமான தீற்றுக்கள். ஓவிய திரையில் என்ன விதமான வண்ணத்தை நான் தீட்டியிருந்தாலும், அது என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது. எனது போராட்டங்களுக்கு ஏதோ அர்த்தம் இருப்பதாக இப்போது நான் நம்புகிறேன்.
**உணர்வுகளால் கைவிடப்பட்ட நிலையில் இன்று நீங்கள் இருப்பதாக கருதினால் அதை நீங்கள் தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பது உங்களுக்குத் தெரியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதுபற்றிப் பேசத் துணிவது குணமடைவதற்கான எனது பயணத்தின் பெரும் பகுதியாகும். கீழே உங்களது மின்னஞ்சல் மற்றும் முகவரியை நீங்கள் அளித்தால் எங்களின் நம்பகமான மற்றும் இலவச ஆதரவாளர் ஒருவர் உங்களுடைய கதையை கேட்கவும் உங்களுக்கு உதவவும் கூடிய விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்ளுவார். **
தனியுரிமை கருதி ஆசிரியர் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.
இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!
நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.