கற்பனை செய்யமுடியாத வலி

இழிவு படுத்துதல் மூலம் உண்டாகும் காயம், நீங்கள் அதை அனுபவிக்கும் வரை, கற்பனை செய்யமுடியாத ஒன்று அது நீங்கள் மேலோட்டமாக அனுபவிக்கும் ஒன்றல்ல, மாறாக எந்த உறவையும் மிக ஆழமாக சென்று துண்டுதுண்டாக கிழித்துப் போட்டுவிடும். நீங்கள் அன்பு செலுத்தும் ஒருவர் உங்களை இழிவு படுத்தினால், உலகம் தகர்ந்து விழுவது போல் உணர்வீர்கள், அனைத்தும் சர்வ சாதாரணமாக மூழ்கிவிடும். எந்த வடிவத்திலும் இழிவு படுத்துதலை சகித்துக்கொள்ளக் கூடாது; என்னுடைய பிரச்சினையான திருமண பந்தத்தில் இதை மெதுவாகக் கற்றுக்கொண்டேன். நான் காயங்களை வாங்கிக்கொண்டது எனது உடலில் மட்டுமல்ல, எனது இதயத்திலும் மற்றும் எனது மனதிலும் காயம் அடைந்தேன்.

இதற்கெல்லாம் இடையில், வலி மற்றும் இழப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்த ஒரு கவிதையையும் நான் எழுதினேன்.

காதல்வயப்பட்ட அந்த நாட்களை நான் இழந்தேன்.
பேசிக்கொண்டிருந்த அந்த நாட்கள்
ஒருவரை ஒருவர் நேசித்தது
சிறிய விஷயங்களுக்காக சண்டையிட்டது
பின்னிரவு பேச்சுக்கள், இரகசியங்களை பகிர்ந்தது
வினோத கனவுகள், அதீத சொந்தம் கொண்டாடியது
உனது அழைப்புக்கு காத்திருக்கும் மனோநிலை
உனது படத்தையும் செய்திகளையும் மீண்டும் மீண்டும் பார்ப்பது
காரணமில்லாத புன்னகை, உன்மீது அதீத நம்பிக்கை,
உனது அணைப்பு, முத்தங்கள், உனது களங்கமில்லா வாழ்த்துக்கள்!
இப்போது இந்தத் திருமணத்தினால், காலியான இன்பாக்ஸ்,
உன்னை காதலிக்கிறேன் என்ற அழைப்புகள் ஏதுமில்லை
இருள் சூழ்ந்த, காயம் மற்றும் சிராய்ப்புக்கள், இழிவு மற்றும் வலி
நீண்ட தனிமை, பகிர்ந்து கொள்ளப்படாத உணர்வுகள்
பின்னிரவு அழுகை, இதயத்தை சிதறடிக்கும் இரகசியங்கள்,
அதிர்ச்சியளிக்கும் துரோகங்கள், சிதறடிக்கப்பட்ட கனவுகள்
அழிக்கப்பட்ட நினைவுகள், பொய்யான புன்னகை
நம்பிக்கைத் தகர்ப்பு, மழுப்பல்களால் ஏற்படும் இதய வலிகள் —
ஏன் உன்மீது அதீத பிரியம், எனக்குத் தெரியவில்லை!

அவர் என்னுடன் சண்டையிடும் ஒவ்வொரு முறையும், நான் உணர்ச்சிகளின் அதீத துயரத்தை அனுபவித்தேன்.—எனது கட்டுப்பாட்டை இழந்தேன். அவ்வாறு இருந்ததால், என்னை காயப்படுத்த அவனுக்குத் தேவையான சக்தியை அவனுக்கு நானே வழங்கினேன். சச்சரவின் போது, என்னுடைய உணர்வுகளுக்கு ஏதாவது மதிப்பளித்திருந்தால், அவன் மீது நம்பிக்கை வைத்திருந்தேன், அவனை நம்பினேன், ஆனால் உண்மையில், அவரது இந்து குடும்பத்தினரின் குறுக்கீடுகள், அவரது குடிப்பழக்கம் மற்றும் அவரது இரக்கமற்ற தன்மை ஆகியவற்றால் விளைந்த ஒவ்வாத பிரச்சினைகள் காரணமாக என்னை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையில் அவர் என்னை கிட்டத்தட்ட ஒரு அடிமை போலவே நடத்தினார்.

மதுப்பழக்கம் அவரை மேலும் மோசமானவனாக்கியது. அவர் குடித்திருக்கும் வேளைகளில், பகுத்தறியும் திறனையும் உணர்வுகளையும் இழந்தார்—இம்மாதிரி சந்தர்ப்பங்களில் தான், அவர் உடல்ரீதியாக மிக மோசமாக இழிவு படுத்துவார். இது தலைகீழாக இருப்பதுபோல் தோன்றினாலும், அந்த சந்தர்ப்பங்களில், எனது தகுதிக்கு மீறி அவர் என்னை இழிவுபடுத்தியதாக நான் நினைத்தேன் ஏனென்றால் அவரது தகுதிக்கு மீறி அவரை நான் நேசித்தது காரணமாக இருக்கலாம்.

என் மகள் என்னிடம் இப்படி சொல்லியே வளர்ந்தாள், “அம்மா, சில சமயங்களில் அப்பா உன்னை அடிப்பது போலவே என்னையும் அடிப்பாரோ என்று நான் பயப்படுகிறேன்.”

எனது குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து பல ஆண்டுகளாக அவரது உண்மை குணத்தை மறைத்து, குருட்டுத்தனமாக அவரை நேசித்தேன். எனது திருமணத்தின் மூலம் எனது அடையாளத்தை, பண்பை மற்றும் எனது கௌரவத்தை நான் இழந்தேன். நான் ஒரு உதவாக்கரையாக வெறுக்கப்பட்டேன். கற்பனைக்கு எட்டக்கூடிய அனைத்து வழிகளிலும் உள்ளம் மற்றும் உடல் ரீதியாக அவனால் நான் நிராகரிக்கப்பட்டேன், ஒரு பயனற்ற பழைய மரச்சாமான் போல—அவன் தூக்கி ஏறிய விரும்பிய ஒன்றாக- நான் அவனுக்கு தோன்றினேன்.

ஒவ்வொரு முறை அவர் என்னை உடல்ரீதியாக இழிவுபடுத்தும் போதும், ஒரு காலத்தில் அவன் மீது நான் கொண்டிருந்த அன்பு மற்றும் மரியாதையை நொறுக்கி சிதறடித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவன் உணரவேயில்லை. பொருந்தமின்மை அடிப்படையில் என்னை விவாகரத்து செய்திருந்தால், அது ஒரு நேர்மையான மனிதத்துவம் உள்ள செயலாக இருந்திருக்கும். ஆனால் அவன் அதைச் செய்யவில்லை; அவனது சுயகௌரவத்தைப் பற்றி அதிகமாக கவலைப்பட்டான். அவனுடன் நான் சேர்ந்திருந்தேன் ஏனென்றால் நான் அன்பு செலுத்திய ஒருவரை இழக்க மனமில்லாதது மற்றும் நான் அன்பு செலுத்திய அந்த நபர் இப்போது இல்லை என்ற உண்மை ஆகியவற்றுக்கிடையில் முடிவெடுக்க முடியாது அலைக்கழிந்தேன்.

எனக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, எங்களது திருமண பந்தம் தொடந்து கொண்டிருக்கையிலேயே அவன் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தான். நான் அந்த தொடர்பு குறித்து சந்தேகப்பட்டேன், ஆனால் ஒருவருடத்திற்கும் அதிகமாக அதை அவன் மறுத்துக் கொண்டிருந்தான். இருப்பினும், அவன் விரும்பிய போதெல்லாம் என்னை பயன்படுத்திக் கொள்வான் மற்றும் இழிவு படுத்துவான். நான் இடிந்து நொறுங்கிப் போனேன்— எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது, நான் ஏதோ தூங்கினேன், நான் அவருடனோ அல்லது மற்றவர்களுடனோ பேசவில்லை. படிப்படியாக, நான் ஒரு பேரதிர்ச்சியில் சிக்கித் தவித்தேன்.

இவை அனைத்தும் எனது மகள் கண்முன் நடந்தேறின. "அப்பா அம்மாவை குளியலறைக்குள் தள்ளி பூட்டிவிட்டார்" அது எவ்வாறென்று இன்னும் சொல்வாள். “அம்மா, சில சமயங்களில் அப்பா உன்னை அடிப்பதுபோலவே என்னையும் அடிப்பாரோ என்று நான் பயப்படுகிறேன்.” என்று என்னிடம் சொல்லியே என் மகள் வளர்ந்தாள்.

என்னுடைய சிறுவயது மகளுக்காக இந்த வன்முறையை சகித்துக் கொண்டேன். பிரிந்து வாழும் பெற்றோர்களை எனது மகள் காணக்கூடாது என்று தான் இந்த உறவை நான் தொடர விரும்பினேன், ஆனால் ஒரு இயல்பான வாழ்க்கையை அவள் வாழ முடியாமல் சூழல் மிக மோசமான நச்சுத்தன்மை கொண்ட நிலையை எட்டியது.

பல வருடங்களாக, என்னுடைய ஒவ்வொரு பகுதியையும் உடல்ரீதியாக அவர் காயப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், என்னுடனான உறவு முடிந்துவிட்டது என்றும் மற்றும் நான் சாவதை அவர் விரும்புவதாக கூறுவார். அவர் அதைச் சொன்னபோது நான் அனைத்தையும் இழந்துவிட்டேன்- அதன் காரணமாகத் தான் அவரது கண் முன்னாலேயே தற்கொலை செய்து கொள்ள நான் முயற்சி செய்தேன். எனது முதுகு வலிக்காக நான் பயன்படுத்தும், மார்ஃபின் கலந்த வலி மாத்திரைகளை அதிகமாக நான் உட்கொண்டேன்.

இதுதான் என் வாழ்கையின் திருப்புமுனை; உயிரோடு மூச்சுவிடத் திணறிக்கொண்டு ஐசியு வில் கிடந்தபோது அது வலி நிறைந்ததாகவும் பயங்கரமானதாகவும் இருந்தது. நான் மிகத் துன்பத்தோடும் நம்பிக்கை இழந்தவளாகவும் இருப்பதாக உணர்ந்தேன், இறந்துவிடத் தான் விரும்பினேன். எனது பெற்றோர் என்னைக் கைவிடவில்லை, மீண்டெழுவதற்கு எனக்கு மிகவும் தேவைப்பட்ட ஆதரவையும் வலிமையையும் எனக்குக் கொடுத்தார்கள். கடந்த ஒரு வருடமாக நான் ஏற்கனவே சிறிது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மனஅழுத்தத்தைப் போக்கும் மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்தேன். மருத்துவமனை படுக்கையிலிருந்தே கடவுளை நான் வேண்டினேன், முடிந்து போன வன்முறை மிகுந்த உறவுக்கு என்னுடைய மதிப்பு மிக்க வாழ்க்கையை முடித்துக்கொள்ள இருந்ததற்காக கடவுளிடம் மன்னிப்புக் கேட்டேன். என் இதயம் கரையும் வரை அழுதேன். மருத்துவமனையிலிருந்து அனுப்பப்பட்ட போது நான் வழக்கமான இருந்த அதே வலுவில்லாத பெண் அல்ல என்பதை உணர்ந்தேன்.

இனிமேல் என்னை யாரும் தோற்கடிக்க முடியாது என்ற நிலைக்கு என்னை மிக வலிமை மிக்கவளாக நான் அனுபவித்த துன்பங்கள் என்னை மாற்றியதன் விளைவாக எனக்குள் இருந்த சக்தியை, உணர்ந்தேன், துயரம் மிக்க என்னுடைய இந்த உறவிலிருந்து விடுபட விரும்பினேன்.—பல ஆண்டுகளாக நான் வாழ்ந்து கொண்டிருந்த இந்த மோசமான திருமண பந்தத்திலிருந்து விடுபட விரும்பினேன். ஒரு ஆண் துணை தேவைப்படாத சுதந்திரமான பெண்ணாக இருக்க நான் விரும்பினேன். இறுதியாக வன்முறை நிறைந்த என் உறவை விட்டு விலகத் தொடங்கினேன். என்னிடம் தவறுகள் இருந்தன, அது பரவாயில்லை. ஆனால் இனிமேலும் நான் பொருட்படுத்தப்படாமல் விடப்படுவதையும், இழிவு படுத்தப்படுவதையும் விரும்பவில்லை. என்னை ஒன்றுமில்லாதவளாக இந்த நிலைக்கு கொண்டுவந்த ஒருவரோடு இனிமேலும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ எனக்கு விருப்பமில்லை.

என்மீது அவர் கொண்டிருந்த அதிகாரத்தையெல்லாம் அவர் இழந்துவிட்டார்.

கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடியிலும் நான் அதிக வலிமையைப் பெறுகிறேன். பிரார்த்தனைகளும், வழிகாட்டுதல்களும் விடாமுயற்சிக்கு இட்டுச்சென்றது. என் குழந்தையோடு சேர்ந்து வாழ்வதற்கான ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை எனக்கு அளித்தது. அதற்கு எதிராக என் மீது அவர் கொண்டிருந்த அதிகாரத்தையெல்லாம் அவர் இழந்துவிட்டார். நான் பழிக்கப்படவும் பயன்படுத்தப்படுவதற்கும் திருமணம் செய்துகொள்ளவில்லை மற்றும் பழிக்கப்படும் ஒரு திருமணத்தை எனது குழந்தைக்கு காட்டுவதை விட நான் ஒரு தனியான தாயாக இருந்துவிடுவதே மேல் என்று நான் இறுதியாக உணர்ந்தபோது, எனது அனைத்து துயரங்களும் வடிந்து போனது. ஒரு புதிய வாழக்கையை தொடங்குவதற்கான ஒளிரும் வலிமையோடு நரகம் போன்ற ஒன்றிலிருந்து நான் மீண்டு வந்தேன்.

நான் மேலே கடந்து செல்லவேண்டியதன் தேவையை அறிந்தேன், ஆகவே அதை நோக்கி எனது பணியை செய்தேன். எனது இதயம் கரையும் வரை அழுதேன், ஆனால் அதை நிறுத்தியவுடன், அதே பலவீனங்களுக்காக மீண்டும் அழுவதில்லை என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டேன். இன்று என் இதயத்திலிருந்து மகிழ்ச்சி வெளிப்படுகிறது, ஏனென்றால் நான் மீண்டெழுந்துவிட்டேன். நான் கீழே வீழ்த்தப்பட்டேன், ஆனால் வலிமையோடும் மற்றும் உறுதிப்பாட்டோடும் நான் மீண்டும் எழுந்துவிட்டேன்.

எந்த பெண்ணும் உடல்ரீதியாக பழிக்கப்படக்கூடாது. ஆனால் நீங்கள் பழிக்கப்பட்டால், நீங்கள் தனியாக இல்லை மற்றும் நீங்கள் பலவீனமானவர் அல்ல. அதை கடந்து மேலே செல்ல தேவையான வலிமை உள்ளவர் நீங்கள் மற்றும் அதற்கான உதவி மற்றும் வழிகாட்டுதல்களுக்கு தேடுங்கள். எங்களது இணைய வழி வழிகாட்டிகளில் ஒருவர் உங்கள் பயணத்தில் ஆதரவாக உங்களோடு வர விரும்புகிறார். தயவுசெய்து உங்கள் தொடர்பு தகவல்களை கீழே அளியுங்கள். விரைவில் நாங்கள் உங்களோடு தொடர்பு கொள்கிறோம்

அந்தரங்கம் கருதி ஆசிரியரின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது
புகைப்பட கிரெடிட் Nadja Tatar

நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.

இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!

நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

உங்கள் பாலினம்:
வயது வரம்பு:

உங்களுக்கு பொருத்தமான வழிகாட்டியை வழங்க உங்கள் பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை நாங்கள் கேட்கிறோம் சேவை விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை.