படரும் இருள்
மன அழுத்தத்தால்-தூண்டப்பட்ட மனச்சோர்வு நோய் எனக்கிருப்பதாக 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாத முன்பகுதியில் கண்டறியப்பட்டேன். வாழ்க்கை ஒரு நிறுத்தத்துக்கு வந்துவிட்டது. என்னால் குடும்பம் அல்லது பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. எனது மனம் இருள் படர்ந்த மேகங்களால் சூழப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். எளிமையான அன்றாட வேலைகளான உண்ணுதல், தூங்குதல், பேசுதல் அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவை மிகப் பெரிய சவாலாகத் தோன்றியது.
எவ்வளவும் அரவமில்லாமல் எனது தலைக்குள் புகுந்து கொண்டது என்பதுதான் மனச்சோர்வு நோயின் அச்சமூட்டும் பகுதியாக இருக்கிறது. நான் எதிர்கொண்ட அறிகுறிகள் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது—காரணமில்லாமல் சோர்வடைவது, எரிச்சல் அடைவது, தூக்கமின்மை, பொதுவாக ஒரு குழப்பம், மற்றும் மறதி- போன்றவை—மனச்சோர்வு நோய்க்கான அறிகுறிகள். இதர அறிகுறியாக நான் உணர்ந்தது, மகிழ்ச்சியும் நிம்மதியும் முழுமையாக தொலைந்து போனது தான்.
எனக்கு நினைவிலிருப்பதெல்லாம், அலுவலகத்துக்கு செல்வதை வெறுத்தேன் என்பதுதான், ஏனென்றால், எனது புதிய பணியின் தேவைகள் அல்லது வணிக நிலைப்பாட்டின் நெளிவு சுழிவுகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அச்சம் என்னை எப்போதும் பீடித்திருக்கும். வீட்டுக்குத் திரும்பியவுடன், எனது வேலையை எனது குடும்பத்தின் வருமான ஆதாரத்தை இழந்துவிடுவேனோ என்று கவலைப்படுவேன். அது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. பெரும்பாலான இரவுகளில் விழித்துக்கொண்டே படுத்திருப்பேன், எனது மனம் எந்த நேரத்திலும் நிலையில்லாமல் தத்தளிக்கும், உண்மைக்குப் புறம்பான சூழ்நிலைகளை கற்பனை செய்து கொண்டே இருக்கும். தூக்கமின்மை, அடுத்த நாள் செயல்பாடுகளை இன்னும் மோசமாக்கியது. இது ஒரு கொடுஞ்சுழல்.
நான் அடைந்த சோகத்துக்கு வடிகால் இல்லை என்று நான் உணர்ந்தேன்.
அந்த நேரத்தில் எனக்கிருந்த மனச்சோர்வு நோய்க்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது பின்னோக்கிப் பார்க்கும் போது, எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த எனது மாமா மற்றும் அவரின் மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து இறந்தது உட்பட பல்வேறு காரணிகளால் விளைந்ததோ அது என்று எண்ணத் தோன்றுகிறது. நான் அடைந்த சோகத்துக்கு வடிகால் இல்லை. ஒரு ஆணாக, கணவனாக, ஒரு தந்தையாக மற்றும் என் பெற்றோர்களுக்கு ஒரே குழந்தையாக இருக்கும் நான் உறுதியோடு இருந்து எனது குடும்பத்தினரின் நன்மைக்காக பணிக்குத் திரும்பவேண்டும்.
அந்த காலகட்டத்தில், குடும்ப சூழலில் இதர சவால்களும் இருந்தன. எனது தாய்க்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டது, அவரது வயதுக்கு அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியதாகத் தோன்றியது. அதே நேரத்தில் எனது மாமியாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு கால்களிலும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல புதிய பணியில் சேர்ந்த சில மாதங்களில் செயல்திறனை நிரூபிப்பதற்கான அழுத்தம் மிகக் கடுமையாக இருந்தது.
தற்கொலை செய்துகொள்ளலாமா என்று ஆலோசித்தேன். எனது குடும்பம் நானின்றி என்ன செய்யுமோ என்ற கவலை என்னை பின்வாங்க வைத்தது. அன்பு பாராட்டும் உறவினரின் மனைவி ஒருவர், அவர் ஒரு மருத்துவர், நான் மருத்துவ ஆலோசனைகளை பெற அறிவுறுத்தினார். நான் ஒரு மருத்துவரை சந்தித்தேன், அவர் பரிந்துரைத்த சில மருந்து இணைவுகள் எனது நிலையை மேலும் மோசமாக்கியது, இது என்னை மேலும் குழப்பமடைய வைத்தது. சுகமடைவதற்கு மாறாக நான் ஏன் இன்னும் மோசமடைகிறேன்?
நெருக்கமான ஒரு குடும்ப மருத்துவர், என்னை ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கச் சொன்னார். அவர் என்னுடைய விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு புதிய மருத்துகளை கொடுத்தார். அந்த மருத்துவர் மிகப் பொறுமையானவர், என்னால் அவரிடம் மனம் திறந்து பேச முடிந்தது. மெதுவாக ஆனால் நிலையாக நான் சுகமடைவதை உணரத் தொடங்கினேன். மருத்துவச் சிகிச்சையை நிறுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவரும் நானும் முழு நம்பிக்கை அடையும் வரை அது சில மாதங்களுக்கு தொடர்ந்தது.
நான் அரிதாக அனுபவித்த ஏதோ ஒன்றை நான் கண்டறிந்தேன் - ஏற்றுக்கொள்ளல்.
இந்த காலகட்டத்தில் எனது மனைவி ஒரு ஆன்மீக சமூகத்தினரிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருந்தார். அவர் தன்னுடன் என்னை வருமாறு அறிவுறுத்திக்கொண்டே இருந்தார். விருப்பமில்லாமல், அவரை திருப்திப்படுத்துவதற்காகவே நான் சென்றேன். உண்மையாகவே இந்த மக்கள் எனக்கு என்ன உதவி செய்துவிடமுடியும் என்று நினைத்தேன். ஆனால் சில முறை சென்ற பிறகு, நான் அரிதாக அனுபவித்த ஏதோ ஒன்றை நான் கண்டறிந்தேன் – ஏற்றுக்கொள்ளல் — ஏற்றுக்கொள்ளல். ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்ட மக்களின் சூழல் என்னை திருப்பிப் போட்டுவிட்டது எனது உண்மையான மதிப்பை நான் உணர்ந்தேன். ஒரு மனிதனாக, ஒரு கணவனாக, ஒரு தந்தையாக. எனது மனைவியும் குழந்தைகளும் அவர்களது மதிப்பை உணருவதை என் கண்களில் கண்டு களிக்க நான் முயற்சிக்கிறேன்.
நீங்கள் மனச்சோர்வால் பீடிக்கப்பட்டிருந்தால், அதைக் கடக்க நீங்கள் தனியாகப் பயணிக்க வேண்டியதில்லை என்பது உங்களுக்குத் தெரியவேண்டும் என்று நான் விரும்புகிறேன். மனச்சோர்வு பல சந்தர்ப்பங்களில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு இட்டுச்செல்லும், இந்த நம்பிக்கையின்மையை தகர்த்து வெளிவர அதற்கு நேரெதிராக செயல்படவேண்டியது அவசியம். நாம் வெளிவந்து, நமது வலிகளைப் பற்றி பேச வேண்டும்.
இந்த வலைத்தளத்தின் வழியாக உங்கள் கதையை கேட்கவும் மற்றும் உங்களைப் பற்றிய மதிப்பீடுகளில் ஈடுபடாமலும் உங்களுக்கு உதவ எங்களிடம் நம்பகமான மற்றும் இலவச வழிகாட்டிகள் இருக்கிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உங்களது தகவல்களை நீங்கள் பூர்த்தி செய்தால், எங்கள் வழிகாட்டி ஒருவர் கூடிய விரைவில் உங்களை சந்திப்பார். உங்களது உண்மையான அல்லது போலி பெயரை நீங்கள் பயன்படுத்தலாம். அது முழுமையாக உங்களைப்பொருத்தது.
நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.
இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!
நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.