தொலைக்கப்பட்ட குழந்தைப்பருவம்

ஒரு குழந்தையாக முதல்முதலில் வன்முறையை நான் அனுபவித்தத போது எனக்கு என்ன வயது என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் நான் இளம் வயதுடையவனாக சுமார் 7 அல்லது 8 வயதில் இருந்திருக்க வேண்டும்.

என்னுடைய குடும்பம் மிகவும் அன்பானது மற்றும் உலகம் மிகவும் "பாதுகாப்பானதாக" தோன்றியது. எங்களது நடுத்தர வயது வேலைக்காரி பலவருடங்களாக எங்கள் குடுபத்திலேயே இருந்து வந்தார்.

எனது பெற்றோர் வேலையில் இருந்த பொழுது ஒருநாள் மதியானம், வீட்டில் வேறு எவரும் இல்லாத சமயம், இந்த வேலைக்காரி அவளுடன் ஒரு "விளையாட்டு" விளையாட வருமாறு என்னை அழைத்தாள். முறையற்ற வகையில் என்னை அவளை தொடச்செய்தாள். அதற்குப் பதிலாக அவள் எனக்கு ஒரு மிட்டாய் கொடுத்தாள் . அது ஒரு "கேளிக்கை விளையாட்டு" என்று கூறி அதை நியாயப்படுத்தினாள். நான் மிகவும் இளம் வயதினன் ஆதலால், அது எனக்குப் பிடிக்கவில்லை, அப்படியே அவளிடம் அதைச் சொன்னேன். இது தவறானது என்று எனக்கு ஏதோ சொன்னது. ஆனால் அது பரவாயில்லை என்று அவள் என்னிடம் சொல்லி அது அவளை "மகிழ்ச்சி"ப்படுத்துகிறது என்று மீண்டும் வலியுறுத்தி அதை நியாயப்படுத்த முயன்றாள். அவளையே சார்ந்திருந்த நான் மிகவும் அருவருப்பாக இருந்தாலும் அதை விளையாடினேன்.

முறையற்ற வகையில் என்னை அவளை தொடச்செய்தாள். அதற்குப் பதிலாக அவள் எனக்கு ஒரு மிட்டாய் கொடுத்தாள்.

அந்த விளையாட்டுக்களை இனிமேல் விளையாட எனக்குப் பிடிக்கவில்லை என்று அவளிடம் சொன்னபோது, என்னுடைய சிறிய தம்பிக்கு அதை செய்யப் போவதாக என்னை மிரட்டினாள். அது போதாதென்று, இந்த மாதிரி பயங்கரமான செயல்களைச் செய்யத் தொடங்கியது நான் தான் என்று என்னுடைய பெற்றோரிடம் சொல்லப் போவதாகவும் அவள் சொன்னாள். எனக்கு வேறு வழியில்லாமல் அதை தொடர்ந்தேன். அது ஒரு யுகம் போலத் தோன்றியது நான் தப்பிக்க முடியாத ஒரு பயங்கரமான கனவில் சிக்கிக்கொண்டேன்

அது எவ்வளவு காலத்துக்கு நீடித்தது என்று எனக்கு நினைவில்லை, என்னுடைய வாழ்க்கையில் இந்த பகுதியின் பெரும்பாலானவை வெறுமையாக இருந்ததும் அதற்குக் காரணமாக இருக்கலாம். எனக்கு நினைவிலிருப்பது, சில வருடங்களுக்குப் பின்னர் அதே வேலைக்காரி என்னுடைய அம்மாவிடம் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது நான் என்னுடைய நிதானத்தை முழுவதுமாக இழந்துவிட்டேன். அவள் எனக்குச் செய்ததற்காக அவள் மேல் நான் மிகுந்த ஆத்திரம் கொண்டிருந்தேன், அதனால் என்னுடைய குரல் அடைக்கும் வரை அவளை நோக்கி கத்தினேன். முழுமையாக நான் நானாக இல்லை, இந்த எதிர்வினை என் தாயாரை ஆச்சரியப்படுத்தியது. பின்னோக்கிப் பார்க்கும் பொழுது அது அனைத்தும் என்னுடைய அடக்கிவைக்கப்பட்ட ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் என்பது புரிந்தது.

பல வருடங்களுக்குப் பிறகு என்னுடைய 36 ஆவது வயதில் என்னுடைய பெற்றோருடன் எனது இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். அப்போது கூட இது ஒரு வன்முறை என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை அவர்கள் முகத்தில் வெளிப்பட்ட இயலாமை, குற்ற உணர்வு மற்றும் சோகம் என்னை இடிந்துபோகச் செய்தது. மன்னிப்புக் கேட்பது எவ்வாறு என்பது தெரியாதிருப்பது போல் தோன்றியது. அவர்களது குழந்தையை பாதுகாக்கத் தவறிவிட்டவர்களாக எண்ணுவது போல் தோன்றியது. நாங்கள் அனைவரும் ஒன்றாக மணிக்கணக்காக அழுதோம். வருடக் கணக்காக அடைத்துவைக்கப்பட்ட குற்ற உணர்வு, கோபம் மற்றும் இயலாமை போன்ற உணர்வுகள் வெளிவரத் தொடங்கின. பகிர்ந்து கொண்டது உள்ளத்தை தூய்மையாக்கும் ஒன்றாக அமைந்தது; அது என்னை அவர்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு சென்றது என்ன நடந்திருந்தாலும் சரி என் மீது அவர்கள் இப்போதும் அன்பு செலுத்துகிறார்கள், அதை நான் மிகவும் மதிக்கிறேன்.

இப்போது 45 வயதான எனக்கு, பாலியல் வன்முறை மற்றும் மன அதிர்ச்சி எனது மனதில் ஒரு ஆழமான வடுவை ஏற்படுத்தி மற்றவர்களை நம்பும் எனது திறனை தடுக்கிறது என்று என் உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையில் நான் நம்புகிறேன். நான் தனியாக வாழ்கிறேன். எனது தொழில் வாழ்க்கையில் ஓரளவு வெற்றியடைந்திருக்கிறேன். எப்போதும் காதலில் விழாத நான், உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன் மற்றும் எதிர்காலம் அனைத்து முனைகளிலும்–தொழில் சார்ந்தும் தனிப்பட்ட முறையிலும் - நல்லதையே கொண்டிருக்கும் என்ற நன்னம்பிக்கையோடு இருக்கிறேன்.

என்னுடைய குடும்பத்தினருடன் என் வாழ்க்கையின் இந்த அம்சத்தை பகிர்ந்து கொண்டதும் மற்றும் அவர்களிடமிருந்து நான் பெற்ற நிபந்தனையற்ற அன்பையும் திரும்பிப் பார்த்து மீண்டும் நினைவு கூர்வது என்னை சுகப்படுத்துகிறது. சிகிச்சையில் பல மணிநேரங்கள் செலவழித்திருக்கிறேன், அது எனது வாழ்க்கையை அனுபவிக்கவும் கடந்த காலத்தை கையாளவும், உதவியிருக்கிறது. என்னுடைய ஒரே வருத்தம் அதை நான் முன்கூட்டியே அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதது மற்றும் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன சொல்வார்களோ, என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் பல வருடங்களை வீணடித்ததும் தான்.

ஒரு குழந்தையாக வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் அது ஒரு ஆழமான வடுவை ஏற்படுத்தியிருக்கிறதா மற்றும் மற்றவர்களிடம் அது பற்றி கலந்துரையாட உங்களுக்கு தைரியம் இல்லையா? நீங்கள் ஒரு குற்ற உணர்வை அல்லது ஒரு அவமானத்தையும் கூட சுமந்து வருடக்கணக்காக சுமந்து கொண்டிருக்கலாம். நீங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பற்றி பேசுவது உண்மையிலேயே பலனளிக்கும். உங்கள் தொடர்பு தகவல்களை கீழே குறிப்பிட்டால், உங்கள் கதையை கேட்டு உதவ ஒருவர் உங்களைத் தொடர்புகொள்வார். ஏனென்றால், இதில் நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டவர் அல்ல.

அந்தரங்கம் கருதி ஆசிரியரின் தாலைப்பெழுத்துக்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
புகைப்பட கிரெடிட் Darwis Alwan

நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.

இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!

நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

உங்கள் பாலினம்:
வயது வரம்பு:

உங்களுக்கு பொருத்தமான வழிகாட்டியை வழங்க உங்கள் பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை நாங்கள் கேட்கிறோம் சேவை விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை.