கட்டுப்பாட்டை இழத்தல்
வாழ்க்கை நன்றாயிருந்தது – புகழ்பெற்ற ஐரோப்பிய அலங்கார ஆடை பிராண்ட் நிறுவனத்தில் நான் வேலை செய்து கொண்டிருந்தேன். எனது பணியை நான் மிகவும் நேசித்தேன், அது என்னுடைய ஈடுபாட்டில் வெளிப்பட்டது. பதவி உயர்வுகள் விரைவில் எனக்குக் கிடைத்தது, பயணிப்பதற்கும் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கும் எனக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. அனைத்தும் சிறப்பாக நடப்பதாகத் தோன்றியது
புதிய கடமைகளுடன் புதிய கொண்டாட்டங்களுக்கான வாய்ப்புக்களும் வந்தன. பெருநிறுவன கேளிக்கைகளில் கலந்து கொள்ள எனக்கு அழைப்புக்கள் வந்தன. நடனமாடுவதையும் மது அருந்துவதையும் நான் நேசித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக, மது அத்தியாவசியம் என்ற உலகுக்குள் இழுத்துச் செல்லப்பட்டேன். என்னுடைய நண்பர்கள் விளைவுகள் பற்றி என்னை எச்சரித்தாலும், நான் அந்த நொடிக்காகவே வாழ்ந்தேன். வெகு விரைவிலேயே, நான் மதுவுக்கு அடிமையானேன்.
இந்த பழக்கம் தொடர்ந்து பல நாட்களுக்கு குடித்துக்கொண்டே இருக்கும் நிலைக்கு என்னை ஆளாக்கும் ஒரு நிலைக்கு கொண்டு சென்றது. சில சமயங்களில் தொடர்ந்து ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு. விழித்திருக்கும் ஒவ்வொரு மணி நேரமும் குடிக்க மட்டுமே நான் விரும்புவேன். மது எனக்கு அத்தியாவசியமானது. அடிமையாகத் தொடங்கும் முன், எனது உடல் தாங்க முடியாத அளவு வரை குடிப்பதை தொடர்ந்தேன். அலுவலக கொண்டாட்டங்களில் “தீங்கற்றது” என்று தொடங்கிய இந்தப் பழக்கம் இப்போது என்னை கிட்டத்தட்ட கொல்லத் தயாராகிவிட்டது.கொண்டாட்டங்களில்
“தீங்கற்றது” என்று தொடங்கிய இந்தப் பழக்கம் இப்போது என்னை கிட்டத்தட்ட கொல்லத் தயாராகிவிட்டது.
என்னுடைய வாழ்க்கையின் மீது எனக்கு ஒரு கட்டுப்பாடு இல்லாததாக உணர்ந்தேன். என்னை பார்த்து நானே வெட்கபட்டேன். எவருடனும் பழகுவதை நான் விரும்பவில்லை . எனது வீட்டை விட்டு வெளியேற நான் விரும்பவில்லை. விரைவிலேயே மது எனது குடும்பத்தில் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. ஒவ்வொரு இரவும் நான் மது அருந்த வேண்டியிருந்தது. மற்றும் எனக்கு நெருக்கமானவர்களை நான் காயப்படுத்திக் கொண்டிருந்தேன்.
எனது வாழ்க்கையை எனது கட்டுக்குள் கொண்டுவர விரும்பினேன், நான் மாற விரும்பினேன், ஆனால் என்னால் முடியவில்லை, செய்வதறியாது அடிக்கடி வெடித்து அழத் தொடங்கினேன். எனக்கு உதவி தேவைப்பட்டது.
அங்குதான் இல்லத்தை நோக்கிய எனது பயணம் தொடங்கியது நான் ஏழு வருடங்களாக மதுவுக்கு அடிமையாயிருந்தேன். மது எனது உடல் மற்றும் உறவுகளை சின்னாபின்னமாக்கி விட்டது. நான் நிறுத்தியாக வேண்டும். ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. மதுவால் நான் இயங்கத் தேவையில்லை என்ற நிலைக்கு நான் வருவதற்கு மூன்று ஆண்டுகளாயின. மீண்டெழுவதற்கான பயணம் அவ்வளவு எளிதாக இல்லை என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். நான்கு வருடங்களுக்குப் பிறகும், நான் மீண்டும் அதில் விழுந்தேன். ஆனால் உண்மை முகத்தில் அறைய மீண்டும் எழுந்து நிற்க தொடங்கினேன். இது நிறுத்தப்பட வேண்டும். இப்போழுதே!
நான் மதுப்பழக்கத்தை அறவே விட்டொழிக்க மிக்க பொறுமையையும் விடாமுயற்சியையும் மேற்கொண்டு எனக்கு உதவிய இந்த நபரிடம் நட்பானேன். தோல்வியுற்றவனாக நான் வாழத் தேவையில்லை என்பதையும் இன்னும் எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கையையும் வாழ்க்கையில் இன்னும் அதிகமான நல்ல விஷயங்கள் இருக்கிறதென்பதையும் எனக்கு உணர்த்தி உதவினார். இன்று நான் மதுவுக்கு அடிமையில்லை. இறுதியாக ஒரு சுதந்திர மனிதனாக என்னைச் சுற்றியுள்ள அழகானவற்றை அனுபவிக்க என்னால் முடிகிறது.
மதுப் பழக்கத்துக்கு அடிமையாவது போல் உங்களுக்குத் தோன்றினால், நீங்கள் தனியாகப் பயணிக்க வேண்டியதில்லை என்பது உங்களுக்குத் தெரியவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உங்கள் கதையை கேட்கவும் மற்றும் சுதந்திரத்தை நோக்கிய உங்களின் பயணத்தில் உங்களுக்கு உதவவும் எங்களிடம் நம்பகமான மற்றும் இலவச வழிகாட்டிகள் இருக்கிறார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்தால், எங்கள் குழுவிலிருந்து ஒருவர் கூடிய விரைவில் உங்களை சந்திப்பார்
தனியுரிமை கருதி ஆசிரியர் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.
இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!
நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.