வாழ்வது மிகவும் காயப்படுத்துகிறது

எனது எட்டாவது வயதில் நான் கஞ்சா புகைக்க தொடங்கினேன். எனது தாத்தா அதை மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்தினார். ஆகவே அவர் எப்போதும் அதை புகைத்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அதில் எதையாவது எப்போதாவது வெளியில் வைத்துவிட்டு சென்றால், அதை தெரியாமல் வெளியில் எடுத்துச் சென்று நான் புகைப்பேன்.

எனக்கு 12 வயதாகும் போது நாங்கள் இடம் மாறினோம். அந்த வயதில் ஒரு புது இடத்துக்கு மாறுவது மிக கடினமாக தோன்றியது. ஒருவருடத்திற்கு பின்னரும், எனக்கு இரண்டு நண்பர்கள் மட்டுமே இருந்தார்கள். ஆகவே நான் அடிக்கடி அதிகமாக கஞ்சா புகைத்தேன். அப்படித் தான் நான் சமாளித்தேன். ஒருநாள், எனது நண்பர்கள் என்னை காட்டுப் பகுதிக்குள் தொடர்ந்து வந்து என்னை கையும் களவுமாக பிடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு அவர்கள் என்னிடம் சுமார் ஒரு வருடம் பேசவில்லை. இரண்டு நண்பர்களின் சகவாசம் அத்தோடு முடிந்தது. இப்போது எனக்கு எவருமில்லை.

ஆகவே நான் உண்மையிலேயே மன அழுத்தத்தில் இருந்தேன். பேசுவதற்கு எவரும் இல்லையென்றால் உங்களுக்கு அதுதான் நடக்கும். இன்னும் அதிகமாக புகைக்க ஆரம்பித்தேன். அதன்பிறகு என்னிடம் பணப்பற்றாக்குறை ஏற்பட்டதை உணர்ந்தேன். அதை அதிகமாகப் பெற ஒரு வழி எனக்குத் தேவைப்பட்டது. ஆகவே அதை விற்பனை செய்யத் தொடங்கினேன். அதில் நான் மிகச்சிறப்பாக செயல்பட்டேன். நான் அதிகமான பணம் சம்பாதித்தேன். நான் தொடர்பு வைத்திருந்த சில மக்களால் நான் பலமுறை அச்சுறுத்தப்பட்டேன். எனது பெற்றோர்களுக்கு அது தெரியாது.

அந்த காலகட்டம் முழுவதும், நான் மிக மிக மோசமாக இருந்தேன். எவரும் என்னைப் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணினேன். கஞ்சா மட்டுமே எனக்கு ஆறுதலாக இருந்து என்னை சந்தோஷப்படுத்தியது. சில சமயங்களில், நான் உண்மையிலேயே அதிக மன அழுத்தத்தில் இருக்கையில், ஒரு துப்பாக்கியில் ஒரு தோட்டாவை ஏற்றுவேன் மற்றும் எனது தலையை நோக்கி குறிவைத்து பிடித்துக்கொண்டு விசையை அழுத்துவேன்.

ஒரு நாள் 2015 ஜனவரி மாதம் 3 ஆம் தேதி இரவு என்னிடம் அதிகளவு கஞ்சா இருந்தது. எனது படுக்கை அறையிலுள்ள எனது மேஜை மீது அவை அனைத்தும் பரப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த இரவில் என்னிடமிருந்த அந்த போதைப் பொருள் அனைத்தையும் புகைத்துவிடுவது அல்லது என்னை நானே கொன்றுவிடுவது என்று முடிவு செய்தேன். ஒரு கத்தியை வெளியில் எடுத்தேன்; எனது மணிக்கட்டில் வெட்டிக்கொள்ளத் திட்டமிட்டேன். ஆனால் எனது இசைக்கருவியை அதிக சத்தமாக நான் இயக்கிக் கொண்டிருந்ததால் எனது தாயார் உள்ளே வந்தார். உள்ளே இருந்த நிலை அனைத்தையும் பார்த்து உடனடியாக பயந்து வெளியேறினார். அங்கிருந்த கஞ்சா அனைத்தும் எனது தாத்தாவுடையது என்று அவர் நினைத்தார். எனது தந்தையை அழைத்து வந்தார். அவரும் உள்ளே வந்து விட்டு உடனே பயந்து வெளியேறினார்.

அந்த இரவில் என்னிடமிருந்த அந்தப் போதைப் பொருள் அனைத்தையும் புகைத்துவிடுவது அல்லது என்னை நானே கொன்றுவிடுவது என்று முடிவு செய்தேன்.

அந்த சமயத்தில் எனக்கும் எனது தந்தைக்கும் இடையில் சில பிரச்சினைகள் இருந்தன. ஆகவே அவர் அங்கு வந்தது அந்தச் சூழ்நிலையை இன்னும் அதிக மோசமாக்கி விட்டது. எனது தாத்தாவை அழைப்பதாக மிரட்டினார், அது கிட்டத்தட்ட எனது தாத்தாவுக்கு பிரச்சினையை உண்டாக்கிவிடும். நான் கத்தியை இன்னும் கையில் வைத்திருந்தேன், ஆகவே அதை எனது தந்தையை நோக்கி பிடித்தேன். எனது தாயார் எனது கையிலிருந்து எப்படி அந்தக் கத்தியை பிடுங்கினார் என்பது நினைவில்லை ஆனால் அதை அவர் எடுத்துவிட்டார்.

அந்த இரவு தான் எனது வாழ்க்கையின் திருப்புமுனை. அது உண்மையாகவே என்னை பெரும் அச்சத்துக்குள்ளாக்கியது.

அதன் பிறகு, எனது மன அழுத்தத்திற்கு உதவியை நாட ஆரம்பித்தேன். மன அழுத்த நிவாரண மாத்திரைகளை உட்கொண்டேன் மற்றும் ஆலோசகர் ஒருவரை பார்க்கத் தொடங்கினேன். ஜனவரியில் அந்த இரவுக்குப் பிறகு நான் கஞ்சா புகைக்கவில்லை, அது அனைத்தும், நிச்சயமாக பயன்படத்தக்க வகையில் இருந்தது. எனக்கு கோப உணர்வு காரணமாக இன்னும் பிரச்சினைகள் இருந்தாலும், உடலுழைப்பு மூலமாக எனது உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடிந்தது. மற்றும் நான் அதிகமான நண்பர்களுடன் பழகினேன்.

ஒருவேளை, முழுவதும் தனிமையாக மற்றும் முழுவதும் தவறாக புரிந்து கொள்ளப்படுவதாக நீங்கள் உணரக்கூடும். ஒருவேளை உங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளக் கூட நீங்கள் நினைக்கலாம். நீங்கள் என்ன உணர்வுகளை கொண்டிருக்கிறீர்கள் என்பது பற்றி பேசுவது உண்மையாகவே உதவும். கீழே உங்கள் தொடர்பு தகவல்களை நீங்கள் அளித்தால், உங்கள் கதையை கேட்கவும் உங்களுக்கு உதவவும் ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார் ஏனென்றால் இதில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை.

அந்தரங்கம் கருதி ஆசிரியரின் முதலெழுத்துக்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
புகைப்பட கிரெடிட் Yogendra Singh

நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.

இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!

நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.

உங்கள் பாலினம்:
வயது வரம்பு:

உங்களுக்கு பொருத்தமான வழிகாட்டியை வழங்க உங்கள் பாலினம் மற்றும் வயது ஆகியவற்றை நாங்கள் கேட்கிறோம் சேவை விதிமுறைகள் & தனியுரிமைக் கொள்கை.