ஒரு தனி நபர், தனிமை மற்றும் கர்ப்பம்
மது போதையில் விழக்கூடிய, பாதுகாப்பற்ற உணர்வு கொண்ட அல்லது ஒழுங்கற்ற உறவுகளில் ஈடுபடும் பெண்ணல்ல நான். இருந்தாலும் துரதிர்ஷ்டம் வாய்ந்த ஒரு மாலையில் ஒரு தவறான தேர்வு என் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றியமைத்துவிட்டது. இதுதான் என் கதை.
இப்போது தான் எனக்கு 21 வயது நிரம்பியது. எனது பெற்றோர் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தனர், உணவு விடுதிக்கு செல்லும் முன்பு சற்று கொண்டாட சில நண்பர்களை வீட்டிற்கு அழைத்திருந்தேன். ஒரு வயது வந்த பெண்ணாக மாறி எனக்கான முடிவுகளை நானே எடுப்பேன் என்ற எண்ணத்தில் நான் அதிதீவிர உற்சாகத்தில் இருந்தேன். இந்த உற்சாகங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது நான் கல்லூரி இறுதி தேர்வுகளை முடித்துவிட்டேன் என்பதும் நாங்கள் கோடைகால விடுமுறைக்கு செல்லவிருக்கிறோம் என்பதுதான்.
விருந்து சிறப்பாக இருந்தது. என் நண்பர்களும் நானும் அருமையாக நேரத்தை கழித்தோம். அப்போது தான் கல்லூரியிலிருந்து நாங்கள் பெற்ற “விடுதலையை” கொண்டாடவும் மற்றும் எதிர்காலம் குறித்து திட்டமிடவும் ஒரு குறுகிய இடைவெளியில் கோவா செல்ல நாங்கள் ஒரு திட்டம் தீட்டினோம். கோவாவில் நாங்கள் ஒரு சில தினங்களைக் கழித்தது மிகச்சிறப்பாக இருந்தது. வெவ்வேறு கடற்கரைகளில் ஒவ்வொரு நாளும், ஒரு விருந்து நிகழ்ச்சி நடந்தது. ஒரு நாள் மாலையில் நானும் எனது நண்பர்களும் ஒரு புகழ்பெற்ற இரவு விடுதிக்கு செல்ல முடிவெடுத்தோம்.
ஒன்றைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்தவைகள் பாதுகாப்பாற்ற உடலுறவில் ஈடுபடுவதற்கு எங்களை இட்டுச்சென்றது
இசை இரைச்சலாக இருந்தது. சுற்றுச்சூழல் மின்சாரம் பாய்வதுபோல் இருந்தது மற்றும் நான் உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் தான் ஒரு நண்பன் அந்த குழுவை விட்டு விலகி நானும் அவனும் மட்டும் இரவில் கோவாவை சுற்றி பார்க்கலாம் என்று என்னிடம் கூறினான். நான் ஒப்புக்கொண்டேன். நாங்கள் வெளியில் இருந்த பொழுது என் மீது காதல் வயப்பட்டதாக அவன் கூறினான். ஒன்றைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடந்தவைகள் பாதுகாப்பாற்ற உடலுறவில் ஈடுபடுவதற்கு எங்களை இட்டுச்சென்றது.
வீட்டிற்குத் திரும்பிய பிறகு சில வாரங்கள் கழித்து, எனது மாதவிடாய் நாளைத் தவறவிட்டதை உணர்ந்தேன். ஏதோ மோசமாக நடந்திருக்கலாம் என்று அச்சப்பட்ட நான், ஒரு கருத்தரிப்பு பரிசோதனை தொகுப்பை வாங்கினேன். எனது கருத்தரிப்பு பரிசோதனையில் நேர்மறையான முடிவை அறிவித்த அந்த இரண்டு கோடுகளைக் கண்டபோது எனது முழு உலகமும் தலைகீழாக மாறிப்போனது. ஒவ்வொரு இளம் பெண்ணும் அனுபவிக்கும் அந்த மிக மோசமான பயங்கர கனவை நானும் அனுபவித்தேன்.
நான் கர்ப்பமுற்றிருக்கிறேன் என்று கண்டுபிடித்தவுடன், நான் ஒரு தனி நபராக, தனிமைப்படுத்தப்பட்டு அச்சம் கொண்டவளாக இருந்தேன். உண்மையில் ஆறுதல் சொல்ல யாருமே இல்லை என்று உணர்ந்தேன். எனது தர்மசங்கடம், அவமானம், சுய வெறுப்பு மற்றும் சுயமரியாதை இழப்பு ஆகியவற்றின் சுமை தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்தது. பிரச்சினையை மேலும் மோசமாக்கும் வகையில் என்னோடு பாதுகாப்பாற்ற உடலுறவு கொண்ட அந்த நபர், என்னோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள அல்லது ஏதாவது ஒரு வழியில் எனக்கு உதவ, மறுத்தார். என்னை ஏமாளியாக்கும் அந்த தாக்குதல் வருவதை நான் எதிர்பார்க்கவேயில்லை.
ஒளியின் வேகத்தில் என் மனது சுழன்றது. நான் கர்ப்பத்தைக் கலைக்க வேண்டுமா? என் பெற்றோரிடம் சொல்லவேண்டுமா? அதைச் சொன்னால் அவர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? குழந்தையை வைத்துக்கொள்ள நான் முடிவுசெய்தால் இந்த சமூகத்தை நான் எப்படி எதிர்கொள்வேன்? மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்? இதைப் பற்றி யோசிக்க யோசிக்க நான் மேலும் குழப்பமடைந்தேன்.
விஷயத்தை மேலும் மோசமாக்கும் வகையில் என்னோடு பாதுகாப்பாற்ற உடலுறவு கொண்ட அந்த நபர், என்னோடு எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள, மறுத்தார்
நான் கர்ப்பமுற்றத்தை எனது பெற்றோரிடம் நான் சொல்லவில்லை. மாறாக, அது தவறு என்று என் உள்மனதுக்குத் தெரிந்தாலும் உடனடியாக கருக்கலைப்பு செய்து கொள்ள திட்டமிட்டேன். இதுபோல் எப்போதும் தனிமையை நான் உணர்ந்ததேயில்லை. உள்ளூர நான் கதறினேன், “இனிமேல் என்னை யார் விரும்பி அன்பு செலுத்துவார்கள்?”
எனது கருக்கலைப்புக்கான தேதிக்கு முன் இடைப்பட்ட நாட்கள் பயங்கரமாக இருந்தது. குற்றஉணர்வு, மன அழுத்தம் மற்றும் தனிமை போன்ற உணர்வுகளால் ஆக்கிரமிக்கப்பட்டேன். என்னால் உணவருந்தவோ அல்லது தூங்கவோ முடியவில்லை மற்றும் நான் அனைவரையும் தவிர்த்தேன். பிறகு எனது கருக்கலைப்புக்கு திட்டமிடப்பட்ட நாளுக்கு முந்தைய வார இறுதி நாட்களில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தது. என்னால் அதை சரியாக விளக்கமுடியவில்லை. ஆனால் எனக்கு சிறிதளவு நம்பிக்கை மற்றும் மன்னிப்பு கிடைப்பதாகத் தோன்றியது. மன அழுத்தம், மனக்குழப்பம் மற்றும் அவமானத்தால் ஒரு மாதத்திற்கும் அதிகமாக உழன்று கொண்டிருந்த என் மீது முதல் தடவையாக - நான் உடைந்து போனதற்கு நடுவே- அன்பு செலுத்தப்படுவதை உணர்ந்தேன். நான் இதை தனியாக மேற்கொள்ள வேண்டியதில்லை என்பதை உணர்ந்தேன். நான் உதவியை நாடலாம். எனக்காக யாரோ ஒருவர் நிச்சயமாக இருப்பார்.
அந்த நாள் என்னை முழுமையாக மாற்றிவிட்டது. நான் கர்ப்பமுற்றிருப்பதை எனது பெற்றோரிடம் சொல்வதற்கான தைரியத்தை வளர்த்துக் கொண்டேன். அவர்கள் முதலில் ஏமாற்றமடைந்தார்கள் ஆனால் என் மீது குற்றம் சாட்டவில்லை. எனக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக அவர்கள் என்னை கட்டி அணைத்து, குழந்தையை வைத்துக்கொள்வது என்று இறுதியாக நான் எடுக்கப்போகும் முடிவுக்கு ஆதரவாக இருந்தார்கள்.
வரும் காலங்களில் எனக்குத் தேவையான தைரியத்தை இது எனக்கு கொடுத்தது. எனது அழகான மகளுக்கு இப்போது 4 வயது ஆகிறது. என்னை ஏற்றுக்கொண்டு என் மகளை அவர் மகளாக கருதும் ஒரு மனிதரிடம் என்னை கொண்டு சென்றது கடவுளின் அருள் ஒன்று மட்டுமே. எங்களுக்கு இப்பொழுது திருமணமாகி விட்டது.
திட்டமிடப்படாத கருத்தரிப்பை நீங்கள் எதிர்கொண்டிருக்கிறீர்களா? இப்போது நீங்கள் நம்பிக்கை இழந்தவராக, சிறைப்பட்டிருப்பதாக உணரக்கூடும் ஆனால் இதில் நீங்கள் தனியாக இல்லை. கீழேயுள்ள படிவத்தை நீங்கள் பயன்படுத்தினால், எங்களது குழுவில் இருந்து ஒருவர் உங்களைத் தொடர்பு கொண்டு உங்கள் கதையை கேட்கவும், உங்களுக்கு நம்பிக்கையளிக்கவும் உதவுவார்கள்.
அந்தரங்கம் கருதி ஆசிரியரின் பெயர் சுருக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.
இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!
நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.