அறநெறிக்கு எதிரான இலாப நோக்கு
பல முதல் முறை தொழில்முனைவோர்களைப் போலவே இறுதியாக அதில் இறங்க முயலுகையில் என்னாலும் உற்சாகத்தை அடக்க முடியவில்லை. ஒரு மில்லியன் டாலர் மதிப்பீடு தந்த மிகுவளத்துக்கான வாக்குறுதி அச்சத்தை எளிதில் முறியடித்தது.
இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன் சுமார் பதினைந்து வருடங்களுக்கு மற்றவர்களுக்காக நான் உழைத்தேன். புதிதாக வேகமாக விரிவடையும் டெலிகாம் தொழில்துறையில் மிகப்பிரபலமான மற்றும் மதிப்பு மிக்க நிறுவனங்கள் சிலவற்றில் பெரும்பாலும் செயல்பாட்டு பிரிவில் எனது அனுபவம் இருந்தது. ஆனால் ஒரு பாரம்பரியத்தை விட்டுச்செல்வது மற்றும் "உலகத்தில் ஒரு அடையாளத்தை ஏற்ப்படுத்துவது" போன்ற எண்ணங்கள் எப்போதும் என் ஆழ்மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.
ஆப்பிள், முகநூல், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆரக்கிள் போன்றவை ஒரு "யோசனை" எப்படி உலகளவிலான ஒரு நிகழ்வாக மாறக்கூடும் என்பதற்கு தலைசிறந்த உதாரணங்கள். இந்த காலகட்டத்தில், வெளிநாட்டில் நான் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது, பின்னாளில் எனது சக ஊழியராகப் போகும் ஒரு மனிதரை நான் சந்தித்தேன். அவரிடம் ஈர்க்கக் கூடிய ஒரு "யோசனை" இருந்தது மற்றும் அதை செயல்படுத்த உதவும் ஒரு முதலீட்டாரும் துளிர்-நிறுவனத்துக்கான நிதியோடு இருந்தார். எனக்கு சம்பளம் தரப்படும், அத்தோடு கூட "பணியாளர் பங்குமுதல்" எனக்குத் தரப்படும். அது எல்லா வகையிலும் மிகச்சிறந்த ஒரு வாய்ப்பு.
ஒரு மில்லியன் டாலர் மதிப்பீடு தந்த மிகுவளத்துக்கான வாக்குறுதி அச்சத்தை எளிதில் முறியடித்தது.
அத்தியாவசியத் தேவைகளான செயல்பாட்டு நிபுணத்துவம் மற்றும் தொடர்புகளை நான் நிறுவனத்துக்கு கொண்டு வந்தேன். ஒரு முயற்சியில் இறங்கும் பொருட்டு நிறைவான ஊதியம் அளித்த நிறுவனத்தை விட்டு விலகினேன். புதிய கணக்குகளை வளர்த்தெடுப்பது மற்றும் வருமானத்தை "உருவாக்குவது" உட்பட செயல்பாடுகள் அனைத்தும் எனது பொறுப்பாக இருக்கப்போகிறது, இயங்கத் தொடங்குவதற்காக ஒரு உற்பத்தி சாலையை அமைத்து சில பணியாளர்களை பணியமர்த்தினோம்.
எங்களது முதல் வாடிக்கையாளரை சேர்த்துக் கொண்டு முயற்சியைத் தொடங்கினோம். விரைவிலேயே இன்னும் சில வாடிக்கையாளர்கள் இணைந்தார்கள். ஒரு சில மாதங்களிலேயே மாத வருவாய் அளவு குறிப்பிடத்தக்க அளவை எட்டியது, அடிப்படையில் நாங்கள் வழங்கிய சேவை தனித்துவமாக விளங்கியதாலும் மற்றும் விரைவிலேயே நாங்கள் பிரபலமானதும் அதற்குக் காரணமாக அமைந்தன. விரைவிலேயே எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் எங்கள் போட்டியாளர்கள் அனைவரின் கவனத்தையும் எங்கள் சேவை ஈர்த்தது.
இருப்பினும் வாடிக்கையாளர்களின் அடித்தளம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி காணவில்லை. அது சிறிது நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. முதன்மைப் பதவியில் நான் இருந்ததால், வாடிக்கையாளர்களின் அடித்தளத்திலிருந்து அதிகபட்ச வருமானத்தை திரட்டும் பொறுப்பு எனது தோள்களில் விழுந்தது. விளையக்கூடிய தோல்வி, வணிக வளர்ச்சி, புகழ் மற்றும் செல்வம் போன்றவை பற்றிய எண்ணங்கள் எனது மனதை இரவும் பகலும் ஆக்கிரமித்தன. நெறிமுறையற்ற செயல்பாடுகளின் வழியாக இலாபத்தை அதிகரிக்க வழியிருப்பதாக அறிந்து "அனைத்து வணிக நிறுவனங்களும் அதில் ஈடுபடும்” போது நாமும் ஈடுபடலாமே என்று எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களது சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடமிருந்து எவ்வாறு ‘சுரண்டுவது’ என்ற ஆலோசனையை அமல்படுத்தினேன்.
சுரண்டல் காரணமாக எங்களது வருமானம் குறிப்பிடத்தகுந்த அளவு வளர்ச்சி கண்டது. நானும் எனது குழுவும் சம்பள உயர்வைப் பெற்றது. இதற்கு முன்பு என்னால் வாங்கமுடியாத சிலவற்றை வாங்கும் நிலையில் நன்றாக உணர்ந்தேன். இருப்பினும் ஏதோ ஒன்று சரியில்லை என்று தெரிந்தது. எப்போதெல்லாம் ஊழல் பற்றிய பேச்சு அடிபடுகிறதோ அப்போதெல்லாம் என் மனதில் ஏதோ குத்துவது போலத் தோன்றும். என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. என்னால் தலைநிமிர்ந்து நடக்கமுடியவில்லை. இதில் பங்குபெற்ற அனைவருக்கும் சமமான பொறுப்பு இருக்கிறது மற்றும் இந்த நிர்வாகப் பொறுப்பாளர்களின் குற்றச்செயல் மூலமாக அனைவரும் பயன்பெறுகிறோம் என்றாலும், இந்த குற்றஉணர்வு மற்றும் அவமானத்தால் பாரமாக உணர்ந்தேன்.
எங்களது வாடிக்கையாளர்களில் ஒருவரை நான் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டபோது, இந்தச் சூழ்நிலை ஒரு திருப்பு முனையை அடைந்தது. இந்த நபருக்கு நானும் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு என்பது தெரியாது. கடின உழைப்பு மூலம் அவர் சம்பாதித்த பணத்தை — அவரால் எளிதில் செலவழிக்க முடியாத ஒரு தொகையை, தான் விரும்பி பயன்படுத்தும் ஒரு சேவை சுரண்டுகிறதே என்று அவர் மிகவும் வேதனையோடு இருந்தார். இந்த அனுபவத்தை எனது நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் பகிர்ந்து கொண்ட போது இந்த தார்மீக வேதனைகளை ஒதுக்கித் தள்ளுமாறு சொன்னார்கள் மற்றும் இப்போதிருப்பதை போன்றே தொடர்ந்து செயல்படுவதற்கான பல்வேறு நியாயத்தை எனக்கு எடுத்துரைத்தார்கள்.
ஒரு கடினமான தேர்வை நான் மேற்கொள்ளவேண்டியிருந்தது- அதை ஏற்றுக்கொள்வது அல்லது வெளிநடப்பது
அதற்கு முன்னரே ஒரு கடினமான தேர்வை நான் மேற் கொள்ளவேண்டியிருப்பதை உணர்ந்துவிட்டேன், வளர்ச்சிக்காக நான் உதவிய இந்த தொடக்க நிலை நிறுவனத்திலிருந்து வெளியேறுவது அல்லது அதை ஏற்றுக்கொண்டு என்னை உள்ளூர துன்புறுத்திக்கொண்டிருக்கும் ஒன்றை தொடர்ந்து செய்துகொண்டிருப்பது. நானும் எனது குடும்பத்தினரும் இது பற்றி கலந்துரையாடினோம். மற்றும் ஒரு முடிவை எட்டினோம். தவறான வழிகளில் நான் ஈட்டிய பணத்தை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் கொடுத்துவிட்டு நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்வது என்று முடிவு செய்தேன்.
பலவருடங்களாக பணிசெய்த நிறுவனத்தை விட்டு விலகிச் செல்வது கடினமாக இருந்தது. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நான் உதவினேன் மற்றும் அவை அனைத்தும் பயனற்று போனது என்று சொல்ல இயலாது. ஆனால் எனது குடும்பத்தினர், நான் பணிபுரிந்த நிறுவனம் ஆகியோரின் முன் மற்றும் மிக முக்கியமாக எனக்காகவும் நான் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும் என்றால் அந்த விலகல் முழுமையாக இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தேன்.
நம்மில் பலர் நமது தொழில் வாழ்க்கையில் இதே மாதிரியான மனக்குழப்பத்தை எதிர்கொள்வோம். உண்மையை அறிந்து கொள்ள சந்திப்புகள் உதவுகின்றன—அல்லது இன்னும் கூட, ஒரு சன்னமான குரல் சரியானதை செய்யுமாறு நினைவுப்படுத்துகிறது —அது விபத்தாகத் தோன்றலாம் ஆனால் அப்படியல்ல. அதில் கவனம் செலுத்த நான் கற்றுக்கொண்டேன், அதைச் செய்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
அவ்வாறு ஒழுக்கம் குறித்து தீர்மானிக்கவேண்டிய ஒரு சந்தியில் நீங்கள் இருந்தால், நீங்கள் தனியாக இல்லை. உங்களிடம் பேச நாங்கள் விரும்புகிறோம். எங்களைத் தொடர்பு கொள்ள கீழேயுள்ள படிவத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
அந்தரங்கம் கருதி ஆசிரியரின் பெயர் சுருக்கப்பட்டுள்ளது.
நீங்கள் இதனை தனியாக எதிர்கொள்ள வேண்டியதில்லை. ஒரு வழிகாட்டியுடன் பேசுங்கள், அது ரகசியமாக வைக்கப்படும்.
இந்த சிக்கல்களை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். உங்களுக்கோ அல்லது பிறருக்கோ தீங்கு விளைவிக்க நீங்கள் கருதுகிறீர்கள் என்றால், உதவி செய்யுங்கள், தயவுசெய்து இதைப் படியுங்கள்!
நீங்கள் Facebook இல் எங்களுடன் தனிப்பட்ட முறையில் இணைக்கலாம் அல்லது கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தி எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பலாம், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.